சூடுபிடிக்கும் ஏசி விலை.. வெயிலை விட மோசமாகும் விலைவாசி.. நடுத்தர மக்களுக்கு கஷ்டம் தான்..!

வெயிலின் தாக்கத்தினை விட விலைவாசி அதிகரிப்பு என்பது மக்களை மிக அதிகமாக பாதித்து வருகின்றது. குறிப்பாக வெயில் காலம் ஆரம்பித்துள்ள இந்த நிலையில், முன்னணி ஏசி உற்பத்தியாளர்கள், இந்த ஆண்டில் தங்களுக்கு இரு இலக்க வளர்ச்சி இருக்கும் என கூறியுள்ளனர்.

மேலும் வீடுகளில் உபயோகப்படுத்தும் ஏசிக்களின் விலையை 5 -8% அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக வோல்டாஸ், எல்ஜி, பானா சோனிக், ஹையர், ப்ளூ ஸ்டார், சாம்சங் உள்ளிட்ட ஏசி நிறுவனங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியினை எதிர்பார்க்கின்றன.

ஏசி தேவை அதிகரிக்கும்

ஏசி தேவை அதிகரிக்கும்

ஏனெனில் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய கூறி வருகின்றன. இதனால் அவர்கள் இந்த வெயில் காலத்தில் ஏசியை நாடலாம். இதனால் ஏசிக்களுக்களுக்கான தேவை அதிகரிக்கும் என்றும் ஏசி தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பல சலுகைகள்

பல சலுகைகள்

அதிலும் தற்போது ஏசி விற்பனையை ஊக்கப்படுத்த சுகாதார அம்சங்களையும், ஏசிக்களில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதோடு விற்பனையை ஊக்கப்படுத்த நோ காஸ்ட் இஎம்ஐ, கேஷ்பேக் மற்றும் பல சலுகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதுவும் விற்பனையை ஊக்குவிக்க பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

ஏசிக்கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் ஏசிக்களின் உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளது. இதனால் விலை அதிகரிக்கலாம். அந்த வகையில் டைகின் ஏர் கண்டிஷனிங் 3 -5% வரை விலையை உயர்த்தலாம் என தெரிவித்துள்ளது. இது விற்பனையில் சில தாக்கத்தினை ஏற்படுத்தும். ஆனால் தேவை அதிகமாக உள்ளது. மேலும் இந்த ஆண்டு வெயில் காலத்தில் வெயில் அதிகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, ஆக விற்பனையும் சூடுபிடிக்கலாம் என கூறியுள்ளது.

பானா சோனிக் என்ன சொல்கிறது?

பானா சோனிக் என்ன சொல்கிறது?

மற்றொரு முன்னணி நிறுவனமான பானா சோனிக் ஏசிக்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதன் விலையும் அதிகரிக்கலாம். அதோடு நாங்கள் சற்று விலை அதிகரிப்பினையும் எதிர்பார்க்கிறோம். ஆக இந்த பருவத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கலாம். குறிப்பாக ஏசிக்களின் விலையானது 6 - 8% அதிகரிப்பு இருக்கலாம்.

பிரிட் விலையும் அதிகரிக்கும்

பிரிட் விலையும் அதிகரிக்கும்

இதே பிரிட்ஜிகளின் விலையானது 3 - 4% ஏற்றம் இருக்கலாம். இது உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் இந்த விலை ஏற்றம் இருக்கலாம், கடந்த சில மாதங்களாகவே மூலதன பொருட்களின் விலையானது அதிகரித்து வருகின்றது, எனவும் பானா சோனிக் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மனிஷ் சர்மா கூறியுள்ளார். கடந்த 3 - 4 மாதங்களாக நாங்கள் ஏசிகளில் 25% வளர்ச்சியினைக் கண்டுள்ளோம். அது இந்த சீசனிலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

வோல்டாஸ் விலை?

வோல்டாஸ் விலை?

மற்றொரு முன்னணி நிறுவனமான வோல்டாஸ் ஏற்கனவே விலையை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஏசிகளுக்கு விலையை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. இது மூலதன பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த விலையேற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நிச்சயம் இந்த பருவத்தில் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று வோல்டாஸின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரதீப் பக்ஷி கூறியுள்ளார்.

ப்ளூ ஸ்டார் விலையேற்றம்

ப்ளூ ஸ்டார் விலையேற்றம்

இதே ப்ளூ ஸ்டார் நிறுவனமும் ஏற்கனவே 5 - 8% வரை விலையை அதிகரித்துள்ளதாகவும், இது ஏப்ரல் முதல் 3% அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த பருவத்தில் 30% வளர்ச்சி இருக்கலாம் என இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. இது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருவதால், அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப ஏசிக்கள் வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஹையர் விலை

ஹையர் விலை

வீட்டில் பயன்படுத்தப்படும் ஹையர் ஏசிக்களின் விலையும் 8% வரை அதிகரிக்கலாம். இது நிறுவனங்களை பொறுத்து 7 - 8% வரை அதிகரிக்கலாம். நாங்கள் இந்த மாத முடிவுக்குள் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என இந்த நிறுவனத்தின் தலைவர் எரிக் பிரகன்ஷா கூறியுள்ளார்.

சாம்சங்கின் திட்டம் என்ன?

சாம்சங்கின் திட்டம் என்ன?

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 51 மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங். இந்த ஆண்டில் இதுவரையிலும் வலுவான விற்பனையை கண்டுள்ளது. ஆக ஏசி விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 70%மும், இதே கடந்த 2019ஐ விட 15% மேலான வளர்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+