சென்னை: இந்தியாவில் முன் எப்போதும் இல்லாததை விட தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் ஏசி விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வரலாற்றில் இல்லாத அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. அனல் காற்று வீசுவதால் ஏசி இல்லாமல் வீட்டிற்குள் கூட இருக்க முடியாது என்ற ஒரு சூழல் இந்தியாவில் தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஏசி-க்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

என்டிடிவி ப்ராஃபிட் (ndtvprofit) வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், மே மாதத்தில் இந்தியாவில் ஏசி விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லி உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல நாட்களுக்கு வெப்ப அலை வீசியதோடு 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானது.
இதனால் குறைந்த வருமானம் இருந்தாலும் கூட ஏசி வாங்க வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் மே மாதத்தில் தான் அதிக எண்ணிக்கையில் ஏசி விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வோல்டாஸ், எல்ஜி, பேனசோனிக், டைகின், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்களின் ஏசி விற்பனை மே மாதத்தில் கணிசமான அளவு உயர்ந்துள்ளன. வோல்டாஸ் நிறுவனத்தின் ஏசி விற்பனை மே மாதத்தில் இரண்டு அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் வரை இந்த டிமாண்ட் காணப்படும் என வோல்டாஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான பிரதீப் பக்சி தெரிவித்துள்ளார். கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 100% விற்பனை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இந்தியாவில் தங்களது நிறுவனங்களின் ஏசி விற்பனை என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு நடப்பு ஆண்டில் கூடுதலாக பல மடங்கு உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் தங்களது விற்பனை 100% வளர்ச்சி அடைந்துள்ளதாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான சஞ்சய் சித்தாரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஏசி-க்கான டிமாண்ட் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான தியாகராஜன் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை ஏசி விற்பனை என்பது இந்தியாவில் 40% வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் ஏசி தேவை உச்சகட்டத்தை எட்டியதாகவும் அவர் கூறியுள்ளார் .ஒட்டுமொத்தமாக காணும் போது ஏசி, கூலர் உள்ளிட்டவற்றின் விற்பனை 70% வரை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் தியாகராஜனை பொறுத்தவரை 2024 ஆம் ஆண்டு தங்கள் போன்ற ஏசி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு பொற்காலம் எனக் கூறியுள்ளார். டைகன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான கண்ஃபாலிஜித் ஜாவா, கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 70% விற்பனை அதிகரித்தது என்றும் இதன் காரணமாக 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தங்கள் நிறுவனத்தின் வருவாய் 40% உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
பேனசோனிக் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவராக இருக்கக்கூடிய அபிஷேக் வர்மா மே மாதம் இதுவரை இல்லாத அளவு தங்கள் நிறுவனத்தில் 52% கூடுதலாக ஏசி விற்பனையானது என்று தெரிவித்துள்ளார்.
ஒட்டு மொத்தமாக இந்தியா முழுவதுமே ஏசி விற்பனை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மின்சார தேவையும் உயர்ந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications