உலகின் முன்னணி ஐடி கன்சல்டிங் மற்றும் ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் அக்சென்சர் பல்வேறு காரணங்களுக்காகக் கொரோனா காலத்தில் தனது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்தது. அக்சென்சர் நிறுவனத்தின் இந்தப் பணிநீக்கம் அறிவிப்பு இந்நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் சக ஐடி நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பயத்தில் இருக்கும் அக்சென்சர் நிறுவன ஊழியர்களுக்கு, அந்நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், நிறுவனத்தை விட்டு வெளியேறுவோருக்கு அக்சென்சர் நிர்வாகம் சுமார் 7 மாத சம்பளத்தை severance payout ஆகக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பொதுவாக நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யும் போது, 1 அல்லது 2 மாதம் அதிகப்படியாக 3 மாதம், இல்லையெனில் நிறுவனத்தில் பணியாற்றிய வருடத்திற்கு இணையான மாத சம்பளத்தை severance payout ஆகக் கொடுக்கும். ஆனால் தற்போது 7 மாத severance payout அறிவித்துள்ளது.
ராஜினாமா
அக்சென்சர் தற்போது அறிவித்துள்ள 7 மாத severance payout (பணி நீக்குச் சம்பளம்) என்பது இந்நிறுவன பணியில் இருந்து தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்து வெளியேறுபவர்களுக்கு மட்டுமே என்றும் அக்சென்சர் தெரிவித்துள்ளது.
இந்த 7 மாத severance payout சம்பளத்தில், 3 மாத நோட்டீஸ் பீரியடும் அடக்கம் என்பதால், கூடுதலாக 4 மாத சம்பளத்தை நிறுவனத்தை விட்டு வெளியேறுவோருக்கு அக்சென்சர் கொடுக்கிறது.
5 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்
அக்சென்சர் நிறுவனம் கடந்த மாதம் செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்ட போது உலக நாடுகளில் இருக்கும் தனது ஊழியர்களில் 5 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை அடுத்த தற்போது தானாக முன்வந்து வெளியேறும் ஊழியர்களுக்கு 7 மாத பணி நீக்குச் சம்பளம் கொடுப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியா
உலகில் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் அக்சென்சர் சுமார் 5 லட்ச ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வர்த்தகம் செய்து வருகிறது. இதில் இந்தியாவில் மட்டும் 2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்திய வர்த்தகத்தில் 5 சதவீதம் என்றால் குறைந்தபட்சம் 10,000 ஊழியர்கள் இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்படலாம்.
வேலைத் திறன்
இந்த வருடம் அனைத்து வர்த்தகப் பகுதிகளில் இருந்தும் 5 சதவீத ஊழியர்களை அவர்களது வேலைத் திறன் அடிப்படையில் தேர்வு செய்து பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது அனைத்து மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அக்சென்சர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications