டெக் உலகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக வேகமாக மாறி வரும் வேளையில் ஒவ்வொரு ஐடி சேவை நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மோசமான நிலையில் இருந்து மீண்டு வரும் பொருட்டு அக்சென்சர் நிறுவனம் அடுத்த ஒரு மாதத்திற்கு விடுமுறையை ஒத்திவைத்து (லீவ் எடுக்காமல்) வேலை செய்து கூடுதல் வரத்தகத்தை உருவாக்க இந்நிறுவனத்தின் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
இது டெக் துறையில் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது, பொதுவாக டெக் நிறுவனங்களில் ஊழியர்களின் நலன் சார்ந்த விஷயத்தில் நிர்வாகம் எப்போதும் தலையீடாது, இதேபோல் அக்சென்சர் ஐயர்லாந்து நாட்டை தேர்ந்த நிறுவனமாக இருக்கும் காரணத்தால் ஊழியர்கள் நலன் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும். இதையும் தாண்டி இத்தகைய முடிவை எடுக்க என்ன காரணம்.

அக்சென்சர் நிறுவனம் தனது 3வது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட போது, சந்தை கணிப்பையும், அதன் சேல்ஸ் மற்றும் புதிய வர்த்தகத்தின் டார்கெட்டை எட்ட முடியாத நிலையில் அதன் பங்குகள் சுமார் 20 சதவீதம் வரையில் சரிந்தது.
இந்த நிலையில் ஐயர்லாந்து நாட்டின் நிதியியல் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கும் வேளையில் ஆகஸ்ட் மாதம் அதிகப்படியான வர்த்தகத்தை உருவாக்க ஊழியர்கள் தங்களுடைய பயன்படுத்தாத விடுமுறையை அடுத்த நிதியாண்டில் எடுக்கும் படி அக்சென்சர் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. இதற்காக விடுமுறை கொள்கையில் முக்கியமான மாற்றத்தையும் செய்துள்ளதாக மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து அக்சென்சர் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவம் வெளியிடவில்லை. மேலும் அக்சென்சர் நிறுவனத்தின் சிஇஓ ஆன ஜூலி ஸ்வீட் ஊழியர்களுக்கு அனுப்பிய மெமோவில், 4வது காலாண்டில் மிகவும் வலிமையான முடிவுகளை வெளியிடுவோம் என நம்முடைய பங்குதாரர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதை அடைய அனைவரின் பங்களிப்பும் அவசியம் என குறிப்பிட்டு உள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இதன் பொருள் நம்முடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் மாற்று வகையில் சேவை அளித்து அதிகப்படியான வருவாயை இக்காலாண்டில் உருவாக்க வேண்டும். மேலும் சேல்ஸ் பிரிவில் இருந்து இக்காலாண்டில் சிறிய, நடுத்தர, பெரிய திட்டங்களை கொண்டு வந்து வலிமையாக முடிக்க வேண்டும் என பொருள்படுகிறது.
இதற்காகவே இந்த வருட விடுமுறையை அடுத்த ஆண்டு எடுத்துக்கொள்வதற்கான பாலிசி மாற்றத்தை கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மே மாதம் முடிந்த காலாண்டில் (மார்ச், ஏப்ரல், மே) புதிய வர்த்தக அளவு 2 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

