அயர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அக்சென்சர், நவம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் அதாவது அட்ரிஷன் விகிதம் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைத் தக்க வைக்கப் போராடி வரும் நிலையில் அக்சென்சர் நிறுவனத்தில் மட்டும் எப்படி அட்ரிஷன் விகிதம் குறைந்துள்ளது என்பது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.
அக்சென்சர் நிறுவனத்தில் மட்டும் அட்ரிஷன் விகிதம் குறைய என்ன காரணம்.
அக்சென்சர்
நவம்பர் 30 ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டில் அக்சென்சர் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 13 சதவீதமாகக் குறைந்துள்ளது, முந்தைய காலாண்டில் இதன் அளவு 20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதோடு அக்சென்சர் நிறுவனத்தில் சுமார் 737,719 ஊழியர்கள் உள்ளனர்.
அட்ரிஷன் விகிதம்
ஒரு ஐடி நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதம் குறைந்தாலே அதன் லாப அளவுகள் அதிகரிக்கும், இதற்கு முக்கியக் காரணம் புதிதாக நியமிக்கப்படும் போது அதிகச் சம்பளமோ, கூடுதலான ஊழியர்களை நியமிக்க வேண்டிய நிலையில் இருந்து தப்பிக்க முடியும். இது தான் அக்சென்சர் நிறுவனத்தில் நடந்துள்ளது.
15.7 பில்லியன் டாலர்
நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிக வருவாய் மற்றும் லாபத்தைப் பெற்றுள்ளது. இக்காலாண்டில் அக்சென்சர் நிறுவனத்தின் விற்பனை 5 சதவீதம் அதிகரித்து 15.7 பில்லியன் டாலராக இருந்தது.
அப்ஸ்கில்லிங்
இந்த நிலையில் அட்ரிஷன் குறைய முக்கியமான காரணமாக அப்ஸ்கில்லிங்-ஐ பார்க்கிறது அக்சென்சர், இதன் மூலம் புதிதாக ஒரு ஊழியரை பணியில் சேர்க்க வேண்டி அவசியம் குறைந்துள்ளது.
சம்பளம்
இதேவேளையில் சம்பளத்தில் இருக்கும் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. ஆனால் ஊழியர்கள் வெளியேறுவது குறைந்த நிலையில், recruiting costs குறைந்து அது ஈடு செய்யப்பட்டு உள்ளது என அக்சென்சர் தெரிவித்துள்ளது.
ஐடி ஊழியர்கள்
ஐடி ஊழியர்கள் தங்களுடைய திறனை மேம்படுத்துவதற்கு நிறுவனமே வாய்ப்பு அளித்து, புதிய திறனில் பணியாற்ற வாய்ப்பும் கொடுக்கும் பட்சத்தில் ஊழியர்கள் வெளியேற்றத்தை குறைக்க முடியும் என்பதை அக்சென்சர் காட்டியுள்ளது. இதை இந்திய ஐடி சேவை நிறுவனங்களும் செய்தாலும் அதற்கான பலன் இன்னும் தெரியவில்லை.
160 பில்லியன் டாலர் ரினிவல்
இதே காலகட்டத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 160 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி திட்டங்கள் ரினிவல் செய்யப்பட உள்ளது. இந்த ரினிவல் செய்யப்படும் காலத்தில் பொதுவாக ஐடி நிறுவனங்களின் சேவையில் திருப்தி அடையாத வாடிக்கையாளர் வேறு நிறுவனங்களைத் தேடிச் செல்வது வழக்கம்.
ஐடி முதலீடுகள்
அதேபோல் தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக ஐடி சேவைக்காக முதலீடு செய்யப்படும் தொகையைக் குறைக்கவும் வாய்ப்புகள் அதிகம். இதுகுறித்து அக்சென்சர், ஹெச்சிஎல், காக்னிசென்ட் ஆகியவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பணிநீக்கம்
இதில் ஏதேனும் ஒரு நிறுவனம் அதிகப்படியான திட்டங்களை இழந்தால் கட்டாயம் வேலைவாய்ப்பு ஐடி துறையிலும் பணிநீக்கம் வர வாய்ப்புகள் உள்ளது.
ஐரோப்பா
ஐரோப்பாவில் 50 சதவீத நாடுகள் ஏற்கனவே தனது மொத்த ஜிடிபி-ல் 60 சதவீத கடனை பெற்று இருக்கும் நிலையில் ரெசிஷன் அச்சம் காரணமாகவும் ஐடி ஊழியர்கள் வெளியேறுவது குறைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஊழியர்கள் நிலை
இந்த நிலையில் ஐடி ஊழியர்கள் தங்களது திறனை மேம்படுத்திக்கொண்டு தொடர்ந்து அனுபவத்தைப் பெற்றால் மட்டுமே வேகமாக மாறி வரும் தொழில்நுட்ப துறையில் தாக்குப் பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. சொல்லப்போனால் அனைத்து துறையிலும் இதேபோன்ற நிலை தான் உருவாகி வருகிறது.
வெளியேற்ற விகிதம்
செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 27.1 சதவீதமாகவும், விப்ரோ 23 சதவீதமாகவும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 23.8 சதவீதமாகவும், டிசிஎஸ்-ன் 21.5 சதவீதமாகவும், டெக் மஹிந்திரா வெளியேற்ற விகிதம் 20 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications