பெங்களூர்: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாகவே மந்தமான வர்த்தக சூழ்நிலையை எதிர்கொண்ட நிலையில் தற்போது, இன்று இரவு வெளியாகும் அமெரிக்க நாணய கொள்கை முடிவுகளைத் தொடர்ந்து ஐடி சேவைத் துறை வேகமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரபல ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் ஒரு அதிர்ச்சி செய்தியைக் கொடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது டிசிஎஸ் தவிர அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் தனது வர்த்தக மந்த நிலையைக் காரணம் காட்டி, ஊழியர்களுக்கான வேரியபிள் பே, சம்பள உயர்வு, பதவி உயர்வுகளைக் குறைத்துள்ளது. குறிப்பாக இன்போசிஸ் இதுவரையில் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் அயர்லாந்து நாட்டின் நிறுவனமான அக்சென்சர், தனது ஊழியர்களுக்கான பதவி உயர்வு அளிக்கும் சுழற்சியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்துள்ளது.
அக்சென்சர் நிறுவனத்தின் இதன்படி, வழக்கமாக டிசம்பர் மாதம் நடைபெறும் பதவி உயர்வுகள் சுழற்சி இனி ஜூன் மாதம் நடைபெறும் என்று நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு ஈமெயில் மூலம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த வருடம் பதவி உயர்வு எதிர்பார்க்கும் அனைவருக்கும் 6 மாத காலம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பதவி உயர்வோடு வரும் சம்பளம் உயர்வும் இதன் மூலம் பாதிக்கப்பட உள்ளது அடுத்த முக்கியமான செய்தியாக அமைந்துள்ளது.
இந்த மாற்றம், அக்சென்சர் நிறுவனம் நிச்சயமற்ற பொருளாதார நிலைமைகளை எதிர்கொள்ளும் நிலையில் இத்தகைய அறிவிப்பு வந்துள்ளது. அக்சென்சர் நிர்வாகம் இந்த முக்கியமான நடவடிக்கை மூலம் நிறுவனத்தின் குறுகிய கால செலவுகளைக் குறைக்க வழிவகுக்கும், இதேபோல் பொருளாதார நிலைத்தன்மையின்மை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் வாயிலாக இது நடந்துள்ளது.
அக்சென்சர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், புதிய பதவி உயர்வு சுழற்சி காலம், நிறுவனத்தின் வாடிக்கையாளர் உத்திகள் மற்றும் சந்தையின் வர்த்தக தேவை நிலைகளைத் தெளிவாகக் கணக்கிட உதவும் என்று கூறியுள்ளார்.
ஐடி சேவைத் துறையை பொறுத்தவரையில் ஆண்டின் நடுப்பகுதியில் வர்த்தக சூழ்நிலை நிலையானதாகவும், தெளிவானதாகவும் இருக்கும் என்பதால் இக்காலகட்டத்தை அடிப்படையாக வைத்து சந்தை நிலவரத்திற்கு ஏற்றார் போல் பதவி உயர்வு அளிக்க அக்சென்சர் நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
இந்த செய்தியைத் தொடர்ந்து, அக்சென்சர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு செவ்வாய்க்கிழமை சுமார் 5% குறைந்துள்ளது. இதன் மூலம் வருடாந்திர அடிப்படையில் பங்கு மதிப்பு சரிவு நிலைக்குச் சென்றுள்ளது. வாடிக்கையாளர்களின் செலவு குறைப்பு நடவடிக்கை மூலம் ஐடி கன்சல்டிங் துறையில் வர்த்தகம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளதன் விளைவு தான் இது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications