தற்போது ஐடி நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. அந்த வகையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அக்சென்ச்சர் (Accenture) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்திய ஐடி நிறுவனங்களில் அடையாளச் சின்னமாக/ அளவுகோலாக ஆக்சென்ச்சர் கருதப்படுகிறது. இந்நிலையில் அக்சென்ச்சரின் வருவாய் அறிக்கை சேவை ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட உலகளவில் ஐடி துறைக்கு ஒரு முக்கிய குறிகாட்டியாகும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மொபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, க்ளோட்ஸ் சர்வீசஸ் உள்பட பிற சேவைகளை வழங்கி வருகிறது. அக்சென்ச்சர் என்பது டிஜிட்டல், கிளவுட் மற்றும் பாதுகாப்பில் முன்னணி திறன்களைக் கொண்ட உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமாகும். AI, கிளவுட், டேட்டா அனலிட்டிக்ஸ், மெட்டாவேர்ஸ் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதுமைகளை இயக்குவதற்கு விரிவாக்கப்பட்ட டெலிவரி நெட்வொர்க் நிறுவனமாக இது திகழ்கிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

அதன்படி கர்நாடகா தலைநகர் பெங்களூர், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புனே, மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா, ஒடிசா தலைநகர் புவனேஸ்வர், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர், ஹரியானாவின் குர்கிராம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்தில் 2 இடங்களில் ஆக்சென்ச்சர் நிறுவனம் இயங்கி வருகிறது. அதன்படி தலைநகர் சென்னை மற்றும் கோவையில் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்நிலையில் தான் ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் கிளைகள் தற்போது, திருச்சியில் வரவுள்ளது. இந்த நிறுவனத்தின் வருகை திருச்சியின் வளர்ச்சி பாதையில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் முக்கிய தருணமாகும். இதன் மூலம், நகரத்தை வலிமையாக உலக வரைபடத்தில் பதித்து, எதிர்கால வேகமான வளர்ச்சிக்கான இலக்காக மாற்றும் நடவடிக்கையாக எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய மாநகரங்களிலிருந்து வளரும் நகரங்கள் வரை, அனைத்து நிலைகளிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்னவென்பதை உலகிற்கு தமிழகம் நிரூபித்து வருகிறது. இந்த நிறுவனம், வரவுள்ளதால், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications