உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் தற்போது ஏஐ, மெஷின் லேர்னிங், டேட்டா அனலிட்டிக்ஸ் துறையைத் தாண்டி முக்கியமானதாகக் கருதும் துறை என்றால் செமிகண்டக்டர் டிசைன் சேவைத் துறை தான்.
ஐடி சேவை துறையில் முன்னோடியாக இருக்கும் அக்சென்சர், பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட செமிகண்டக்டர் டிசைன் சேவை நிறுவனமான எக்செல்மாக்ஸ் டெக்னாலஜிஸை (Excelmax Technologies) திங்கட்கிழமை மொத்தமாக வாங்கியதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், அக்சென்சர் நிறுவனத்தின் வளர்ந்து வரும் சிலிக்கான் டிசைன் மற்றும் இன்ஜினியரிங் பிரிவை மேம்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எக்செல்மாக்ஸ் டெக்னாலஜிஸ், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், டேட்டா சென்டர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கம்பியூடேஷனல் பிளார்ட்பார்ம் ஆகியவற்றில் கஸ்டம் சிலிக்கான் டிசைன் சேவைகளை வழங்குகிறது.
இதுமட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல், டெலிகாம் மற்றும் ஹைய்-டெக் துறைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எட்ஜ் ஏஐ (Edge AI) பயன்பாடுகளைச் செயல்படுத்துவதற்கான கம்பியூடேஷனல் பிளார்ட்பார்ம் வழங்குகிறது.
இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் தற்போது டேட்டா சென்டர் அதிகரித்து வரும் வேளையிலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங் (Edge Computing) ஆகியவற்றின் பயன்பாடும் அதிகரித்து வரும் காரணத்தால் இத்துறையில் முழுமையான சேவையை வழங்குவதற்காக அக்சென்சர் நிறுவனம் இந்த பெங்களூர் நிறுவனத்தை வாங்கியுள்ளது.
அக்சென்சர் நிறுவனம் எக்செல்மாக்ஸ் டெக்னாலஜிஸை கையகப்படுத்துவதன் மூலம், இந்தியாவில் உள்ள தனது அதிநவீன தொழில்நுட்ப மையங்களுக்கு (Advanced Technology Centers) சுமார் 450 க்கும் மேற்பட்ட திறன்மிக்க சிலிக்கான் வல்லுநர்களை இணைத்துள்ளது. இதன் மூலம் அக்சென்சர் நிறுவனத்தின் உலகளவில் சிலிக்கான் சேவைகளுக்கு இந்தியா ஹப் ஆக மாறும்.
அக்சென்சர் இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவா-வை (Ottawa) தளமாகக் கொண்ட சிலிக்கான் டிசைன் சேவை நிறுவனமான எக்ஸ்ட்ரீமெடாவை (XtremeEDA) கையகப்படுத்தியதற்கு அடுத்து இந்த பெங்களூர் எக்செல்மாக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது.
இந்த வாரத்தில் இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான துறையில் முன்னோடியாக இருக்கும் எல் & டி குழுமத்தின் துணை நிறுவனமான எல் & டி செமிகண்டக்டர் டெக், சிலிக்கான்ச் சிஸ்டம்ஸ் (SiliConch Systems) என்ற நிறுவனத்தை மொத்தமாக வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, லார்சன் அண்ட் டியூப்ரோ சுமார் ரூ.133 கோடியை முன்பணமாகச் செலுத்த உள்ளது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications