உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான அக்சென்சர் நிறுவனம் வியாழக்கிழமை தனது உலகளவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்ததில் இருந்து இந்தியா ஐடி நிறுவனங்களும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிடுமான என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்சென்சர் நிறுவனம் ரெசிஷன் மற்றும் சர்வதேச வங்கி துறை நெருக்கடிகள் மூலம் தனது வருடாந்திர வருவாய் மற்றும் லாப கணிப்புகளை குறைப்பதாகவும் கூறியுள்ளது.
இந்த முக்கியமான சூழ்நிலையில் அக்சென்சர் சிஇஓ ஜூலி ஸ்வீட் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
அக்சென்சர் சிஇஓ ஜூலி ஸ்வீட்
அக்சென்சர் சிஇஓ ஜூலி ஸ்வீட் இந்நிறுவன ஊழியர்களுக்க அனுப்பிய ஈமெயிலில் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் குறித்தும், அதற்கான காரணம் சூழ்நிலைகளையும் விளக்கிய பின்பு நிறுவனம் குறைந்த எண்ணிக்கையிலான நிர்வாக இயக்குனர்களை கொண்டு இயங்க முடியும் என தெரிவித்தார்.
நிர்வாக இயக்குனர்கள்
அக்சென்சர் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தில் தற்போது இருக்கும் நிர்வாக இயக்குனர்கள் எண்ணிக்கையை காட்டிலும் குறைவான எண்ணிக்கை கொண்டே வளர்ச்சி பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியும் என தெரிவித்தார். இதன் மூலம் அக்சென்சர் நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாகத்திலும் அதிகப்படியான பணிநீக்கம் இருக்கும் என்பதை உறுதி செய்தார்.
வளர்ச்சி பாதை
அக்சென்சர் நிறுவனத்தை அதன் சிஇஓ ஜூலி ஸ்வீட் மிகவும் கடிமான சூழ்நிலைக்கு மத்தியில் இயங்கி வரும் வேளையில் ஊழியர்களின் அதிகப்படியான சம்பள அளவுகள் பெரும் சுமையாக கருதுகிறார். இந்த நிலையில் நிறுவனத்தை மிண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர pricing improvements, cost efficiencies மற்றும் operational rigour சவால்களில் முதல்கட்டமாக பணியாற்ற திட்டமிட்டு உள்ளார்.
முக்கிய டார்கெட்
இதில் முக்கியமாக செலவுகளை குறைக்க ஜூலி ஸ்வீட் தலைமையிலான நிர்வாக உயர் அதிகாரிகள் எண்ணிக்கை, கார்பரேட் இயக்கம், அலுவலக இடம் ஆகியவைற்றை குறைக்கவும், அதன் செலவுகளை குறைக்கவும் திட்டமிட்டு வருகிறது.
19000 ஊழியர்கள பணிநீக்கம்
அக்சென்சர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மட்டும் அல்லாமல் உலகளவில் இருக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் அனைத்தும் டெக் சேவைக்கு செய்யும் செலவுகளை குறைத்து வரும் வேளையில் வருவாய் வளர்ச்சியை நிலைநிறுத்த அடுத்த 18 மாதத்தில் 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications