உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் அக்சென்சர் கடந்த மாதம் முழு ஆண்டு வருவாய் மற்றும் முதல் காலாண்டு வருவாயின் வால் ஸ்ட்ரீட் இலக்குகளை விட குறைவாக இருக்கும் என கணித்து அறிவிப்பை வெளியிட்டது. இதோடு பணவீக்கம் மற்றும் வட்டி விகித அழுத்தங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு வரையில் ஐடி சேவைக்கான டிமாண்ட் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அறிவித்து இந்திய ஐடி நிறுவனங்களை சோகத்தில் ஆழ்த்தி வந்தது.
இந்நிலையில் இந்த வாரம் ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் இதேவேளையில் சம்பள உயர்வு, வேரியபிள் பே குறித்து அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. டிசிஎஸ் 100 சதவீத வேரியபிள் பே, டிசம்பர் 1 முதல் விப்ரோவின் சம்பள உயர்வு ஆகியவற்றின் மூலம் ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைக்க துவங்கினர்.

இதை அப்படியே மாற்றும் வகையில் அக்சென்சர் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது. ஆனால் சட்டப்பூர்வமாக கட்டாயமாக சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்ற இடங்களில் மற்றும் முக்கியமான திறன் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் எனவும் விளக்கம் கொடுத்துள்ளது.
அக்சென்சர் நிறுவனத்தின் இந்திய சந்தையின் நிர்வாக இயக்குநரான அஜய் விஜ் ஊழியர்களுக்கு அனுப்பிய இமெயிலில், "நம்முடைய வர்த்தக செயல்பாட்டின் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது சில முக்கியமான திறன் பகுதிகளைத் தவிர வேறு எந்த ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்படமாட்டாது" என தெரிவித்துள்ளார்.
மேலும் அஜய் விஜ் இந்த இமெயிலில் தற்போது ஐடி சேவை துறை மேக்ரோ பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சியில் மந்தநிலைகளை எதிர்கொள்ளும் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மேலும் சந்தையின் நிலவரத்தின் படி ஊழியர்களின் பணி மற்றும் சம்பளம் ஆகியவை உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அக்சென்டர் நிறுவனம் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தனது ஊழியர்களுக்கு போனஸ் அளவுகளையும் குறைக்க உள்ளது, ஊழியர்களுக்கான பதவி உயர்வும் ஜூன் 2024 வரையில் நிறுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அக்சென்டர் நிறுவனத்தில் மொத்தம் 7,33,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர், இது டிசிஎஸ் நிறுவனத்தின் 6 லட்சத்தை காட்டிலும் அதிகமானது. அக்சென்டர் நிறுவனத்தின் இந்தியாவில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் மார்ச் 2023ல் 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது மறக்க முடியாத ஒன்று.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications