அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் உலக நாடுகள் மீது வரி விதிப்பது மட்டும் அல்லாமல் அந்நாட்டின் பல்வேறு துறைகளில் செலவுகளை குறைக்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். ஒருபக்கம் முக்கிய துறைகள் என்று கூட பார்க்காமல் அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறார். பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது, இதன் அமெரிக்காவில் அரசு பணியில் இருப்பவர்களும், அரசு சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கும் பீதியிலேயே உள்ளனர்.
இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக டிரம்ப் நிர்வாகம் 3ஆம் தரப்புக்கு அளிக்கப்படும் ஒப்பந்தங்களை ஆய்வு செய்து வருகிறது. தேவையில்லாத இடத்தில் 3ஆம் தரப்பினருக்கு ஒப்பந்தம் கொடுத்து பல பில்லியன் டாலர் செலவு செய்யப்படுவது கண்டுப்பிடித்துள்ளது எலான் மஸ்க் தலைமையிலான DOGE அமைப்பு.

இதன் படி அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் வியாழக்கிழமை வெளியிட்ட முக்கியமான உள் துறை அறிவிப்பின் படி, தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சேவைகளுக்காக வெளி நிறுவனங்களுக்கு அதாவது 3ஆம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரங்களை மறுசீரமைப்பு செய்து, திறம்பட பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய அதிரடி நடவடிக்கைக்கு முக்கியமான காரணம் அமெரிக்க அரசின் கடன் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதேபோல் அரசின் செலவுகளும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்தவே DOGE அமைப்பு உருவாக்கப்பட்டு தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுக்குறித்து பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் அலுவலகம் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவில் அக்சென்சர் மற்றும் டெலாய்ட் போன்ற முன்னணி கன்சல்டன்சி நிறுவனங்களுடன் கொடுக்கப்பட்ட ஐடி சேவைக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரத்து செய்யப்படவுள்ள இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு சுமார் 5.1 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட முக்கிய காரணம், 3ஆம் தரப்பு ஆலோசனை சேவைகளுக்காக செலவிடப்படும் தொகை தேவையற்றது என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பென்டகன் ஊழியர்களே செய்யக்கூடிய சில எளிய பணிகளுக்கு எதற்காக 3ஆம் தரப்பு நிறுவனத்திற்கு பெரும் தொகையை கொடுத்து ஏன் செலவிட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் அலுவலகம் 5.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதில் அக்சென்சர் மற்றும் டெலாய்ட் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதன் மூலம், சுமார் 5.1 பில்லியன் டாலர்களை பென்டகன் சேமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வெளிப்புற சேவை ஒப்பந்தங்களை ரத்து செய்வதன் அபராதம் தொகை அல்லது இழப்புகளை கழிப்புக்கு பின்பு சுமார் 4 பில்லியன் டாலர்கள் வரை சேமிக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications