கொங்கு மண்டலத்தின் தலைநகரமாக விளங்கும் கோயம்புத்தூர் கடந்த 10 வருடத்தில் வெறும் உற்பத்தி துறையை மட்டுமே நம்பியிருக்கும் நிலை மாறி தற்போது பெங்களூருக்கு இணையாக ஒரு டெக் நகரமாக மாறி வருகிறது. லாக்டவுன்-க்கு பின்பு எப்போதும் இல்லாமல் அதிகப்படியான டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் கோயம்புத்தூரில் தனது அலுவலகத்தை அமைத்துள்ளது. இதோடு பிரபலமான ஐடி சேவை நிறுவனங்களும் தனது அலுவலகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது.
இப்படி, உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த உள்ள நிலையில், சமீபத்தில் திறக்கப்பட்ட கோயம்புத்தூர் அலுவலகத்தை, விரிவாக்கம் செய்ய உள்ளது. இதற்காக கோவை விளாங்குறிச்சி பகுதியில் ELCOT சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) கூடுதலாக 1,00,622 சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது அக்சென்சர்.

தற்போது இந்த அலுவலகத்தில் 6,600 ஊழியர்கள் பணியாற்றி வரும் வேளையில், இந்த விரிவாக்கத்தின் மூலம் அக்சென்சர் கூடுதலாக 1400 - 1500 ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளது. இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்சென்ச்சர் வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவை தனது முக்கிய குளோபல் டெலிவரி சென்டராக வைத்துள்ளது. லட்சக்கணக்கான ஊழியர்களுடன் இந்தியாவில் இயங்கும் இந்நிறுவனம், தொழில்நுட்ப ஆலோசனை, கிளவுட் சேவைகள், AI தீர்வுகள் வழங்குகிறது.
தற்போது உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் 2ஆம் நிலை, 3ஆம் நிலை நகரங்களில் அதிகளவில் அலுவலகங்களை திறந்து வருகிறது. ஒரு ஒருப்பக்கம் ரியல் எஸ்டேட் செலவுகளை குறைப்பதை தாண்டி, குறைவான சம்பளத்தில் திறன்வாய்ந்த ஊழியர்களை பணியில் அமர்த்தும் ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
இதேபோல் உள்ளூர் மக்களை பணியில் அமர்த்தும் போது நீண்ட காலம் அந்த ஊழியர் பணியில் இருப்பார்கள் என்பதால், சிறு நகரங்களில் அலுவலகத்தை திறப்பது தற்போது முக்கியமானதாக மாறியுள்ளது. கார்ப்ரேட் நிறுவனங்களும் இதை ஏற்றுக்கொள்ள முக்கிய காரணம் 2ஆம் நிலை, 3ஆம் நிலை நகரங்களில் அனைத்து விதமான உள்கட்டமைப்பு வசதிகளும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications