உலகளவில் புகழ்பெற்ற ஐடி நிறுவனங்களில் ஒன்றான Accenture நிறுவனம் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழக்கமான சம்பளத்துடன் சேர்த்து போனஸ் வழங்கப்படுவது உண்டு. அந்த வ்கையில் தான் போனஸ் அறிவிப்பை Accenture வெளியிட்டுள்ளது.
Accenture நிறுவனத்தில் வேலை செய்யும் 8 லட்சம் ஊழியர்களில் பெரும்பாலானவர் இந்திய ஊழியர்கள் தான். இதனால் இந்நிறுவனம் வெளியிடும் எந்த ஒரு அறிவிப்பும் ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த முறை தனது இந்திய ஊழியர்களுக்கு பணியாளர் திறமையின் அடிப்படையில் 8% முதல் 26% வரை போனஸ் அறிவித்துள்ளது.

ஊழியர்களின் செயல்பாடுகள் மற்றும் திறமையின் அடிப்படையிலும் சீனியாரிட்டி அடிப்படையிலும் 8% முதல் 26% வரை போனஸ் தொகையை வழங்கியுள்ளது. நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக பணியை செய்தவர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஊழியர்களுக்கு இந்த முறை போனஸ் வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழியர்களுக்கு போனஸ் நல்ல முறையில் வழங்கப்பட்டாலும், பெரும்பாலான ஊழியர்களின் வழக்கமான ஆண்டு சம்பள உயர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் செலவினங்களை கட்டுப்படுத்தவும், மேக்ரோ பொருளாதார சூழல்களை கையாளவும் Accenture நிறுவனம் சம்பள உயர்வுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Accenture நிறுவனத்தில் உள்ள நான்கில் மூன்று பங்கு ஊழியர்கள் இந்தியாவில் தான் பணியாற்றுகின்றனர். எனவே, நிறுவனம் எடுக்கும் இத்தகைய ஊதிய மற்றும் போனஸ் முடிவுகள் இந்தியாவின் தொழில்நுட்பத் துறை வட்டாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த 2023, 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்திருந்த இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சொற்பமான சம்பள உயர்வை தந்தது. இந்நிலையில் ஓராண்டாகியும் ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடாமலே உள்ளது.
Accenture நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கமாலும் பதவி உயர்வு வழங்காமலும் தவிர்த்து வருகிறது. ஐடி நிறுவனங்களூக்கு கடந்த சில ஆண்டுகள் சவாலானவையாகவே உள்ளன. ஏஐ வருகை, அமெரிக்க பொருளாதார மந்த நிலை ஆகியவை காரணமாக நிறுவனங்கள் ஊழியர்களை குறைப்பது, சம்பள உயர்வை நிறுத்தி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.


Click it and Unblock the Notifications

