உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் அடுத்த 18 மாதங்களில் 19,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சில நாட்கள் முன்பு அறிவித்தது.
இந்த பணிநீக்கம் செயல்முறை எப்போது தொடங்கும், எந்த துறைகளிஸ் அதிகம் பணிநீக்கம் இருக்கும் என்பது குறித்து எவ்விதமான தகவல்களை அக்சென்சர் வெளியிடவில்லை, இதனால் இந்நிறுவன ஊழியர்கள் பீதியிலேயே இருந்தனர்.
ஆனால் அக்சென்சர் சத்தமே இல்லாமல் தனது பணிநீக்க பணிகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்சென்சர் நிறுவனம்
அக்சென்சர் நிறுவனம் அயர்லாந்து நாட்டு நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வருகிறது, இதனால் இந்த 19000 ஊயழிர்கள் பணிநீக்கத்தில் இந்தியாவில் அதிக ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அக்சென்சர் நிறுவனத்தின் HR அணி யாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என பட்டியலை தயாரிக்க துவங்கியுள்ளதாக இந்தியா டூடே தெரிவித்துள்ளது.
பென்ச் ஊழியர்கள்
அக்சென்சர் நிறுவனத்தில் பல ஆயிரம் ஊழியர்கள் எந்த ப்ராஜெக்ட்-லும் இல்லாமல் பென்ச்-ல் உள்ளனர். இந்த நிலையில் யாரெல்லாம் நீண்ட காலமாக எந்த ப்ராஜெக்ட்டிலும் இல்லாமல் பென்ச்-ல் இருக்கிறார்கள் என பட்டியலிட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்கள் எந்த தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதற்கான தரவுகளையும் திரட்டியுள்ளது. இதன் மூலம் முதலீல் வெளியேற்றப்படுபவர்கள் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்களாக தான் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
பணிநீக்கம் உறுதி செய்தது
இதேவேளையில் அக்சென்சர் நிர்வாகம் அந்நாட்டு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் நிறுவனத்தில் செலவுகளை குறைக்க அப்ரேஷன்களை நெரிப்படுத்தவும், non-billable அதாவது வருமானம் அளித்தாக பிரிவுகள், ஊழியர்களை மறுசீராமைப்பு செய்து செலவுகளை குறைக்கவும் பணிகளை துவங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பென்ச் ஊழியர்கள் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் பென்ச் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஊழியர்கள்
அக்சென்சர் அடுத்த 18 மாதத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 2.5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதுவரையில் எந்த ஊழியர்களுக்கும் பணிநீக்கம் அறிவிப்பை வெளியிடாத அக்சென்சர் எப்போது பணிநீக்கத்தை துவங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அக்சென்சர் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 7,21,000 பேர் இதில் 40 சதவீதம் பேர் இந்தியாவில் பணியாற்றி வருகின்றனர். அக்சென்சர் ஊழியர்கள் எண்ணிக்கை டிசிஎஸ் நிறுவனத்தை காட்டிலும் அதிகம்.
நிர்வாக இயக்குனர்களின் பணிநீக்கம்
சமீபத்தில் அக்சென்சர் நிறுவனத்தின் சிஇஓ ஜூலி ஸ்வீட் உலகளாவிய வர்த்தகத்தில் தற்போது இருக்கும் நிர்வாக இயக்குனர்கள் எண்ணிக்கையை காட்டிலும் குறைவான எண்ணிக்கை கொண்டே வளர்ச்சி பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியும் என தெரிவித்தார். இதன் மூலம் அக்சென்சர் நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாகத்திலும் அதிகப்படியான பணிநீக்கம் இருக்கும் என்பதை உறுதி செய்தார். இதன் மூலம் அக்சென்சர்-ன் இந்த MASS LAYOFFல் அடிமட்ட ஊழியர்கள் முதல் உயர் பதவி ஊழியர்கள் வரையில் பாதிக்கப்படுவது நிச்சயமாகும்.
புதிய வேலைவாய்ப்புகள்
இதே நேரத்தில் அக்சென்சர் நிறுவனத்தின் இணைய தளத்தின் படி சுமார் 500க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளுக்கு ஆட்களை தேடி வருகிறது. பணிநீக்கத்தில் சீரியஸ் ஆக இருக்கும் வர்த்தகத்தை தொடர்ந்து நிலைநிறுத்த புதிய ஊழியர்களை பல தொழில்நுட்பத்தின் கீழ் சேர்த்து தான் வருகிறது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications