சத்தமில்லாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்த Accenture.. பீதியில் டெக் ஊழியர்கள்.!

சர்வதேச அளவில் இயங்கி வரும் முன்னணி கன்சல்டிங் நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture), கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் (AI) அதிவேகமான பயன்பாடு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வரும் பணித் தேவைகள் குறைந்துள்ளதே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பணிநீக்கங்கள் 865 மில்லியன் டாலர் மதிப்புள்ள மறுகட்டமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதி என்றும், வரும் மாதங்களில் மேலும் சில வெளியேற்றங்கள் இருக்கலாம் என்றும் அக்சென்ச்சர் எச்சரித்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஜூலி ஸ்வீட் முக்கிய தகவலை கூறியுள்ளார்.

சத்தமில்லாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்த Accenture.. பீதியில் டெக் ஊழியர்கள்.!

அவர் கூறுகையில், எங்களுக்கு தேவையான திறன்களுக்காகப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது சாத்தியமில்லாத நிலையில், அவர்களை குறுகிய காலக்கெடுவுக்குள் வெளியேற்றி வருகிறோம் என்று தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளுக்கான வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, நிறுவனத்தின் பணியாளர்களை விரைவாக மாற்றி அமைப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால், தற்போதைய சூழலுக்குத் தேவையான புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள முடியாத ஊழியர்கள் மேலும் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, அக்சென்ச்சரின் உலகளாவிய மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 7,79,000-ஆக குறைந்துள்ளது. இது, 3 மாதங்களுக்கு முன்பு இருந்த 7,91,000 என்ற எண்ணிக்கையை விட குறைவாகும். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு, நவம்பர் 2025 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மறுகட்டமைப்பு நடவடிக்கையானது முக்கியமாக பணிநீக்க செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சேமிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

புதிய AI-இல் ஊழியர்களுக்குப் பயிற்சி : பணி நீக்கங்களை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், அக்சென்ச்சர் நிறுவனம் புதிய திறன்களை மேம்படுத்துவதிலும் முதலீடு செய்து வருகிறது. சிக்கலான வேலைகளை தானியங்குபடுத்த வடிவமைக்கப்பட்ட புதிய அலை AI கருவிகளான 'ஏஜென்டிக் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்' (Agentic Artificial Intelligence) குறித்த பயிற்சியை நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்க தொடங்கியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள வணிகங்கள் AI மூலம் தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைக்க முற்படுவதால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இந்த பயிற்சி முக்கியம் என்று ஜூலி ஸ்வீட் வலியுறுத்தினார். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு மத்தியிலும், அக்சென்ச்சர் நிறுவனம் தனது நிதி ஆண்டின் ஜூன்-ஆகஸ்ட் காலாண்டில் 17.6 பில்லியன் டாலர் வருவாயைப் பதிவு செய்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 7% அதிகம் மற்றும் ஆய்வாளர்களின் மதிப்பீடுகளை விஞ்சியது. இந்த முடிவுகள், வாடிக்கையாளர்களுக்கு AI உடன் இணைந்து புதுமைகளை உருவாக்க உதவும் அக்சென்ச்சரின் தனித்துவமான திறனைக் காட்டுகிறது என்று ஜூலி ஸ்வீட் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் வருகை, நிறுவனங்களின் செயல்முறையை மாற்றுவதோடு, பணியாளர்களின் திறன்களிலும் பெரிய மாற்றத்தை கோரி வருகிறது. இந்த நிலை, தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய திறன் மேம்பாட்டின் அவசியத்தை அழுத்தமாக உணர்த்துகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+