இந்திய ஐடி நிறுவனத்தில் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் மூன்லைட்டிங் செய்பவர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை வைத்து நிர்வாகம் செய்யும் அக்சென்சர் நிறுவனத்தில் 1000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
கொரோனா காலத்தில் இந்திய ஐடி துறையில் அதிகப்படியான டிமாண்ட் உருவானது, இதனால் ஊழியர்களை அவசர அவசரமாக நிறுவனத்தில் சேர்க்கும் நிலை ஐடி நிறுவனங்களுக்கு உருவானது, இதன் விளைவு தான் தற்போது அக்சென்சர் நிறுவனத்தில் உருவான பிரச்சனை.
காப்ரேட் துறை
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாகும் முக்கியமான துறைகளில் ஐடி துறை முதன்மையாக இருக்கிறது. இந்தக் காப்ரேட் துறையில் பெரும் பகுதி ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் மட்டுமே கொண்டு இருக்கின்றனர்.
500000 வேலைவாய்ப்பு
2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 500000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ள இதே நேரத்தில் அட்ரிஷன் விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் அக்சென்சர் எடுத்துள்ள நடவடிக்கை ஐடி துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலி ஆவணங்கள்
போலி ஆவணங்கள் மற்றும் அனுபவக் கடிதங்கள் மூலம் நிறுவனத்தில் வேலை பெற்ற ஐடி ஊழியர்களைக் கண்டறியப்பட்டதால், தற்போது பலரை அக்சென்சர் தனது இந்தியா அலுவலகத்தில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளது.
அக்சென்சர்
இதுவரை எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது தெரியாத நிலையில், அக்சென்சர் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய ஐடி துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பணிநீக்கம்
தற்போது டிவிட்டரில் வெளியாகியுள்ள தகவல்கள் படி அக்சென்சர் இந்தியா, போலி ஆவணங்கள் மற்றும் முன்-அனுபவக் கடிதங்கள் மூலம் நிறுவனத்தில் வேலைக்கு ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கக் கூடும் எனக் கணிக்கப்பட்டு வருகிறது.
அக்சென்சர் விளக்கம்
இந்தியாவில் அக்சென்சர் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காகப் போலி நிறுவனங்களின் ஆவணங்கள் மற்றும் அனுபவக் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இதனால் நிர்வாகத்தை ஏமாற்றிய ஊழியர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது அக்சென்ச்சர் இந்தியா நிர்வாகம்.
வாடிக்கையாளர் சேவை
1000 கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டாலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கான சேவை செய்வதற்கான திறனில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதையும் அக்சென்ச்சர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விதிமீறல்
அக்சென்சர் தனது வலுவான வணிக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் விதமாக எந்தவொரு விதிமீறல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாத பூஜ்ஜிய சகிப்புத்தன்மை மூலம் தற்போது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
புதிய ஊழியர்கள்
மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் இடத்தில் தகுதியான நபர்களுக்கு நாங்கள் தொடர்ந்து பணியமர்த்தி வருகிறோம், இதனால் நிறுவனத்தின் சேவையில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது அக்சென்சர்.
கொரோனா தொற்றுக் காலம்
கொரோனா தொற்றுக் காலத்தில் அதிகப்படியான ஊழியர்கள் டிமாண்ட் இருந்த நிலையில் இதைச் சமாளிக்கக் கிடைக்கும் ஊழியர்களைப் பணியில் சேர்க்கத் துவங்கியது. இதன் வாயிலாகப் பலர் போலி ஆவணங்கள் மற்றும் முன்-அனுபவக் கடிதங்கள் மூலம் அக்சென்சர் மட்டும் அல்லாமல் பல்வேறு ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications