உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான அக்சென்ச்சர்-யின் வளர்ச்சி மற்றும் நிர்வாக முடிவுகள் இந்திய ஐடி சேவை துறைக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஐ காட்டிலும் ஊழியர்கள், வருமானம், லாபம், வர்த்தகத்திலும் பெரிய நிறுவனமாக இருக்கும் அக்சென்ச்சர் 2026 நிதியாண்டின் வளர்ச்சி மற்றும் வர்த்தக நிலைப்பாடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அக்சென்ச்சர் வெயிட்டுள்ள அறிவிப்பின் படி 2026ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், ஊழியர்களை குறைக்கவும், சில முக்கிய நிறுவன கைப்பற்றல் திட்டத்தை கைவிடவும் முடிவு செய்தாக அறிவித்துள்ளது.

செப்டம்பர் 25 அன்று நடந்த அக்சென்ச்சர் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடும் கூட்டில் இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 2025 நிதியாண்டில் 69.7 பில்லியன் டாலராக உயர்ந்து, 7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தாலும், FY26-ல் 2 முதல் 5 சதவீத வளர்ச்சி மட்டுமே எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் கிட்டத்தட்ட இதை வர்த்தக போக்கு தான் இந்திய ஐடி சேவை துறையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்சென்ச்சர் நிறுவனத்திற்கு ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கும்போதே தனது வருமான கணிப்பை குறைத்திருக்கும் நிலையில், இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
ஊழியர்கள் பணிநீக்கம்:
அக்சென்ச்சர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு தேவையான புதிய திறன்களுக்கு பொருந்தாத ஊழியர்களை அடுத்த சில மாதங்களில் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என இந்நிறுவன சிஇஓ ஜூலி சுவீட் கூறினார்.
2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஏற்கனவே 7,000 ஊழியர்கள் குறைந்துள்ள நிலையில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 7,70,000-ஆக உள்ளது.
ஜெனரேட்டிவ் AI மற்றும் கிளவுட் முதலீடுகள்
இந்த ஊழியர் குறைப்புக்கு மத்தியில், அக்சென்ச்சர் ஜெனரேட்டிவ் AI மற்றும் கிளவுட் சேவைகளில் முதலீட்டை தொடர்ந்து செய்கிறது. இந்தத் துறைகளில் வலுவான தேவை உள்ளதால், நிறுவனம் 5,50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு AI அடிப்படை பயிற்சி அளித்துள்ளது.
வர்த்தக கைப்பற்றல் மற்றும் வர்த்தக மூடல்
இதேபோல் அக்சென்ச்சர் நிறுவனம் சமீபத்தில் திட்டமிடப்பட்ட நிறுவன கைப்பற்றல் முயற்சிகளை கைவிட உள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் இந்நிறுவனத்தின் Non-Core வர்த்தகத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 865 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
முதலீட்டு திட்டங்கள்
ஊழியர் குறைப்பின் மூலம் ஏற்படும் சேமிப்புகள், ஊழியர்களின் பயிற்சி மற்றும் வணிகத்தில் மீண்டும் முதலீடு செய்யப்படும். அக்சென்ச்சர், FY26-ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்கும் என உறுதியளிக்கிறது.
கிட்டத்தட்ட இதேபோன்ற நிலைப்பாட்டை தான் டிசிஎஸ்-ம் எடுத்துள்ளது, ஆனால் வருவாயில் ஏற்படும் சரிவு இந்திய ஐடி துறைக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.


Click it and Unblock the Notifications