நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமாக செயல்பட்டு வரும் Accenture நிறுவனம் இந்தியாவில் அதிகமானவர்களை பணிக்கு அமர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக Accenture நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜூலி ஸ்வீட் முதலீட்டாளர்களுடன் சந்திப்பில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அப்போது பேசிய அவர் இந்தியாவில் அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதற்கே தற்போது முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறியுள்ளார். குறிப்பாக தொழில்நுட்ப பிரிவில் இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் தற்போது தொழில்நுட்ப பிரிவில் தான் பல்வேறு நிறுவனங்களும் ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறது , வரும் நாட்களில் இந்த பிரிவினை சேர்ந்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்த அவர் தங்களது நிறுவனம் இந்த பிரிவில் இந்தியர்களுக்கு தான் முன்னுரிமை வழங்குகிறது என தெரிவித்துள்ளார்.
Accenture நிறுவனத்தை பொறுத்தவரை தற்போது சர்வதேச அளவில் 7. 7 லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர். இதில் 3 லட்சம் பேர் இந்தியாவில் வேலை செய்கின்றனர்.
2024 ஆம் நிதி ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் இந்த நிறுவனம் கூடுதலாக 41,484 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மட்டும் இந்த நிறுவனம் 24 ஆயிரம் பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது.
Accenture நிறுவனம், செப்டம்பரில் இருந்து ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தை நிதி ஆண்டாக கருதுகிறது. மேலும் இந்த நிறுவனம் தங்களுடைய வருமான கணிப்பை 3%இல் இருந்து 6% ஆக உயர்த்தி உள்ளது. இதற்கு மேக்ரோ எக்னாமிக் பிரிவு தற்போது சாதகமாக இருக்கிறது என்றும் அண்மையில் அமெரிக்க வங்கி வட்டி விகிதங்களை குறைத்ததையும் காரணமாக கூறுகிறது.
Accenture நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இதன் வருமானம் 17.4 பில்லியன் டாலர்கள் என 6% வரை உயர்வு காணும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு Accenture நிறுவனத்தின் வருமானம் 2% அதிகரித்து 64.9 பில்லியன் டாலர்கள் என உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் வருமானம் 16.4 பில்லியன் டாலர்கள் ஆகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 5% அதிகமாகும்.
அதுமட்டுமின்றி Accenture நிறுவனம் புதிதாக 81.2 பில்லியன் டாலர்களுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 13 % அதிகம் என சொல்லப்படுகிறது மேலும் ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவில் இந்த நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications