அக்சென்சர் நிறுவனம் வியாழக்கிழமை தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் அக்சென்சர் தனது வருடாந்திர வருவாய் மற்றும் லாப கணிப்புகளை குறைப்பதாகவும் கூறியுள்ளது. இவ்விரு முக்கியமான அறிவிப்புக்கு அடிப்படையான காரணம் மோசமான உலகப் பொருளாதார சூழ்நிலைகள் தான்.
ஐடி சேவை துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் மத்தியில் அக்சென்சர் முதல் நிறுவனமாக தனது வருவாய் கணிப்பை வெளியிட்டது மட்டும் அல்லாமல் செலவுகளை குறைக்க 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.
பிற இந்திய ஐடி சேவை நிறுவனங்களும் பணிநீக்கம் அறிவிப்புகளை வெளியிடுமா? இந்திய ஐடி சேவை துறையின் நிலைமை என்ன..?
அக்சென்சர் நிறுவனம்
அக்சென்சர் நிறுவனம் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ரெசிஷன் அச்சம் நிறைந்த காலக்கட்டத்தில் ஐடி சேவைகளுக்கு உலகளாவிய நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதாக கருத்து நிலவி வரும் வேளையில் அக்சென்சர் நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்புகள் இதை உறுதி செய்துள்ளது.
பொருளாதார மந்தநிலை
பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷன் அச்சம் மற்றும் டெக் சேவைகள் மீதான செலவின குறைப்புகள் குறித்த எச்சரிக்கை கணிப்புகள் மூலம் அக்சென்சர் நிறுவனம் வியாழன் அன்று அதன் வருடாந்திர வருவாய் வளர்ச்சி மற்றும் இலாப கணிப்புகளை குறைத்துள்ளது.
வருவாய் வளர்ச்சி கணிப்பு
அக்சென்சர் நிறுவனம் இப்போது ஆண்டு வருவாய் வளர்ச்சியை 8% முதல் 10% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. முன்பு இதன் அளவீட்டை 8% முதல் 11% ஆக நிர்ணயம் செய்திருந்தது.
அமெரிக்கா
அமெரிக்காவில் ஒரு பக்கம் வங்கிகளின் நிதி நிலை மோசமாகி வருகிறது, மறுப்புறம் பெரிய டெக் நிறுவனகங்களின் 2வது ரவுண்ட் பணிநீக்கம், இதற்கிடையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இது பணபுழக்கத்தை கூடுதலாக கட்டுப்பாடுத்தும், புதிய கடன்களின் அளவீட்டை குறைக்கும்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பா
தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் திவால் காரணமாக ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் வருமானம் பாதிக்கும் என்பது தான் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் 52 வார சரிவை நெருங்கியுள்ளது, விப்ரோ 52 வார சரிவை அடைந்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்போசிஸ்
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்போசிஸ் ஆகியவை அமெரிக்காவில் உள்ள பிராந்திய வங்கிகளுக்கு (Regional Banks) அதிக வர்த்தக வெளிப்பாட்டைக் கொண்டுள்ளன என்று ஜே.பி.மோர்கன் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். அமெரிக்காவில் திவாலாகியுள்ள வங்கிகள் அனைத்தும் பிராந்திய வங்கி தான்.
பிராந்திய வங்கிகள்
அமெரிக்காவில் உள்ள பிராந்திய வங்கிகளுக்கு சேவை அளிப்பது மூலம் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தங்களது மொத்த வருவாயில் 2-3 சதவீத பங்கைக் கொண்டுள்ளன என J.P. மோர்கன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை அதிக பங்கீட்டை கொண்டு உள்ளது.
BFSI பிரிவு
வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகி வருவது மட்டும் அல்லாமல் பெரிய வங்கிகள் பணபுழக்க பாதிப்பில் மாடிக்கொண்டு இருக்கும் நிலையில், திவாலாகாமல் தப்பித்தால் போதும் என நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்தியா ஐடி சேவை துறையில் பெரும் பகுதி வருவாய், வர்த்தகம் BFSI பிரிவில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தை வங்கிளில் அதிக வர்த்தகத்தை கொண்டு உள்ளது.
ஐடி BPM துறை
இந்திய ஐடி பிஸ்னஸ் பிராசஸ் மேனேஜ்மென்ட் துறை-யின் 245 பில்லியன் டாலர் வர்த்தக சந்தையில் சுமார் 41 சதவீதம் BFSI எனப்படும் பேங்கிங், பைனான்சியல் சரிவீசஸ், இன்சூரன்ஸ் துறையை மட்டுமே சார்ந்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கிகள் வீழ்ச்சி இந்திய ஐடித்துறையை பல வகையில் பாதிக்க துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications