உலகமே ரெசிஷன் குறித்து உச்சகட்ட பயத்தில் இருக்கும் வேளையில் இந்திய ஐடி துறை நிறுவனங்களைப் பயமுறுத்தும் வகையில் அக்சென்சர் நிறுவனம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
உலக நாடுகளில் உருவாகியுள்ள பொருளாதார மந்தநிலையில் மக்கள் புதிய பொருட்கள் வாங்குவதிலும், செலவு செய்வதிலும் தயக்கம் காட்டி வரும் நிலையில் இந்தியாவில் ஏற்றுமதியை நம்பியிருக்கும் பல நிறுவனங்கள் கடந்த 3 மாதமாக அதிகளவிலான வர்த்தகச் சரிவை எதிர்கொண்டு வருகிறது.
இந்தத் தாக்கம் தற்போது இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக இருக்கும் இந்திய ஐடி துறையைப் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இதைக் கிட்டத்தட்ட உறுதி செய்யும் வகையில் அக்சென்சர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்சென்சர்
அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்லின்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அக்சென்சர் நிறுவனம் வெள்ளிக்கிழமை ஐடி சேவைக்காகச் செலவிடும் நிறுவனங்கள் இந்தப் பொருளாதார மந்த நிலையில் செலவிடும் தொகையைக் குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என அறிவித்தது.
ஐடி சேவை நிறுவனம்
சர்வதேச அளவில் மாபெரும் ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் அக்சென்சர் நிறுவனத்தின் இந்தக் கணிப்புத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களைப் பதம் பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.
பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அனைத்து நிறுவனங்களும் உயர்வுடன் இருக்கும் போது இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் மட்டும் சரிந்துள்ளது. குறிப்பாக இன்போசிஸ், டிசிஎஸ் 1 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.
என்எஸ்ஈ
இதேபோல் என்எஸ்ஈ சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் உயர்வுடன் இருக்கும் போது ஐடி மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகள் மட்டும் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது. அக்சென்சர் நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை 6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக்குப் பின்பு ஐடி சேவை நிறுவனங்கள் அதிகப்படியான ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் திட்டங்களைப் பெற்ற நிலையில், ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு உருவான பொருளாதார மந்த நிலையால் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஹெச்சிஎல் நிறுவனம்
இந்த மாத துவக்கத்தில் ஹெச்சிஎல் நிறுவனம் நடப்பு நிதியாண்டிற்கான வருவாய் வளர்ச்சியானது கணிப்பில் அளவீடுகளில் குறைவான அளவீட்டைத் தொடும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து தான் அக்சென்சர் தற்போது தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.
வருவாய்
ஹெச்சிஎல் நிறுவனம் தனது வருவாய் கணிப்பைச் சந்தையில் இருக்கும் அதிகப்படியான தடுமாற்றம் மற்றும் சில துறைகளில் செலவின அளவுகள் குறைத்துள்ளதைக் காரணம் காட்டி வருவாய் வளர்ச்சி அளவு தனது கணிப்பின் கீழ் மட்டத்தை அடையும் எனத் தெரிவித்துள்ளது.
காக்னிசென்ட்
கடந்த மாதம் காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன் இந்த ஆண்டுக்கான அதன் வருவாய் மற்றும் லாப கணிப்புகளைக் குறைத்தது. இதற்கு முக்கியமாக அதிகப்படியான விலைவாசி மற்றும் ஒப்பந்தங்களில் ஏற்பட்டு உள்ள பின்னடைவைக் காரணங்களாகக் குறிப்பிட்டு உள்ளது.
அக்சென்சர்
அக்சென்சர் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிக வருவாய் மற்றும் லாபத்தைப் பெற்றுள்ளது. இக்காலாண்டில் அக்சென்சர் நிறுவனத்தின் விற்பனை 5 சதவீதம் அதிகரித்து 15.7 பில்லியன் டாலராக இருந்தது. ஆனாலும் சந்தை கணிப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications