இந்திய ஐடி துறை ஊழியர்கள் ஏற்கனவே சம்பள உயர்வு கிடைக்காமலும், குறைவான வேரியபிள் பே தொகை உடனும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நெட்ஆப் நிறுவனர் சிஇஓ ஜார்ஜ் குரியன் ஐடி துறையில் மையில்டு ரெசிஷன் வரும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் ஆக்சென்சர் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் வியாழக்கிழமை முழு ஆண்டு வருவாய் மற்றும் முதல் காலாண்டு வருவாயின் வால் ஸ்ட்ரீட் இலக்குகளை விட குறைவாக இருக்கும் என கணித்துள்ளது. அதிகப்படியான பணவீக்கம் மற்றும் வட்டி விகித அழுத்தங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு வரையில் ஐடி சேவைக்கான டிமாண்ட் அளவில் பாதிப்பு ஏற்படும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது இந்திய ஐடி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஐ காட்டிலும் அதிகப்படியான வருமானம் ஈட்டும் அக்சென்சர் நிறுவனத்தின் போக்கு தான் பிற முன்னணி ஐடி சேவை நிறுவனத்திலும் இருக்கும்.
அக்சென்சர் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு வருவாயும் இலக்குகளை அடைய தவறவிட்ட நிலையில், இந்நிறுவன பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 5% சரிந்தது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும், அதன் காலாண்டு முடிவுகளிலும் எதிரொலிக்க உள்ளது. அக்டோபர் 12 ஆம் தேதி இன்போசிஸ் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களை எதிர்பார்த்ததை விட நீண்ட காலத்திற்கு உயர்வாகவே வைத்திருக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் இந்த வருடம் இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க மீண்டும் ஒரு முறை வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இது அனைத்தும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்வாகவே இருக்கும் என்பதால் நிறுவனங்கள் தங்களுடைய செலவுகளை ஆரோக்கியமான நிலைக்குத் திரும்புவதற்கு கூடுதல் காலம் எடுக்கும், மேலும் செலவுகளை குறைக்க புதிய முயற்சிகள் எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஐடி மற்றும் டெக் சேவைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இந்திய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் ஜூலை மாதத்தில் அதன் முழு ஆண்டு வருவாய் கணிப்புகளை பாதியாகக் குறைத்தது, அதே நேரத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கணிசமாக பாதிப்பு ஏற்படும் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அக்சென்சர் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் earnings per share பிரிவில் 12.45 டாலர் பெறும் என கணிக்கப்பட்ட நிலையில், இந்நிறுவனம் 11.97 முதல் 12.32 டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் வருவாய் வளர்ச்சி அளவீடு 2- 5 சதவீதத்திற்கு மத்தியில் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது, இதுவும் சந்தை கணிப்புக்கு குறைவான அளவீடு.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications