அயர்லாந்து நாட்டின் டப்லின் நகரை தலைமையிடமாகக் கொண்டு உலக நாடுகள் முழுவதும் இயங்கி வரும் ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர்-ன் மூன்றாம் காலாண்டு (Q3) செயல்பாடுகள் எப்படியிருக்கும் என தனது கணிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்த கணிப்புகள் இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்களுக்கு வரும் காலாண்டில் அதன் வர்த்தக வாய்ப்புகள் குறித்த சூழ்நிலைகளை முன்கூட்டியே காட்டியுள்ளது. தற்போது அக்சென்சர் நிறுவனத்தின் முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும் காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.

சரி அக்சென்சர் நிறுவனத்தின் நிதி நிலை ஏன் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு முக்கியம்..? இதில் முதலும் முக்கியமான விஷயம் இந்திய ஐடி நிறுவனங்களின் 90-95 சதவீத வர்த்தகம் வெளிநாட்டில் தான். இதனால் அக்சென்சர் மற்றும் இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தக சந்தை ஒன்று தான்.
இதேபோல் அக்சென்சர் நிறுவனத்திற்கு இணையான அளவில் டிசிஎஸ் உள்ளது. இதன் வாடிக்கையாளர் பிரிவில் இன்ஃபோசிஸ் நிறுவனம் பெரிய அளவில் ஒத்துப்போகிறது. இதேபோல் இந்தியாவின் பெரிய IT நிறுவனங்களை விட சிறப்பாக செயல்படும் நிறுவனமான அக்சென்சர் உள்ளது. இதனால் அக்சென்சர் நிறுவனத்தின் உயர்வும், சரிவும், இந்திய ஐடி சேவை நிறுவனங்களிலும் ஒத்துப்போகும்.
சரி விஷயத்திற்கு வருவோம் அக்சென்சர் நிறுவனம் தனது 3ஆம் காலாண்டில் அதன் செயல்பாடுகள் குறித்த கணிப்புகளை வெளியிட்டு உள்ளது. இந்க நிலையில் இந்நிறுவனத்தின் மேனேஜ்டு சர்வீசஸ் (Managed Services) பிரிவு சிறப்பாகச் செயல்படுவதாக அறிவித்துள்ளது. இந்தப் பிரிவு இந்திய IT நிறுவனங்களுக்கும் பெரும் பலமாக உள்ளது.
அந்த வகையில் அக்சென்சர் நிறுவனத்தின் மேனேஜ்டு சர்வீசஸ் வருவாய் 3ஆம் காலாண்டில் 2 சதவீதம் அதிகரித்து 8.01 பில்லியன் டாலர்களை எட்டும் என கணிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பெரிய நிறுவனங்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான போட்டி கடுமையாக இருப்பதால், இந்தப் போட்டியில் நடுத்தர IT நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்றும் சந்தை வல்லுனர்கள தெரிவிக்கின்றனர். தற்போதைய கடினமான பொருளாதார சூழலில், செலவுக் குறைப்பு ஒப்பந்தங்கள் பொதுவாகப் பெரிய நிறுவனங்களுக்கே செல்லும் என்பதே இதற்குக் காரணம்.
ஜூன் 20 அன்று, அக்சென்சர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 நிதிய ஆண்டிற்கான வருவாய் மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. முன்பு 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரையிலான வளர்ச்சி இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரையிலான வளர்ச்சி மட்டுமே இருக்கும் எனத் தனது மதிப்பீடாக மாற்றியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த காலாண்டில் அக்சென்சர் நிறுவனத்தின் வருவாய் 1 சதவீதம் குறைந்து 16.5 பில்லியன் டாலர்களாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது..
அக்சென்சர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் (Julie Sweet) நிறுவனத்தின் பணியாளர்களில் சுமார் 55,000 திறமையான டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் உள்ளதாகக் கூறினார். 2026 நிதிய ஆண்டின் இறுதிக்குள் எங்கள் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு பணியாளர்களை 40,000 இல் இருந்து 80,000 ஆக இரட்டிப்பாக்குவது என்ற எங்கள் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications