இன்றைய வேகமான உலகில் UPI பணப் பரிவர்த்தனைகள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் சேவைகள் பரிவர்த்தனையை மிகவும் எளிமையாக்கியுள்ளன. ஷாப்பிங் செய்தாலும் சரி டிக்கெட்கள் முன்பதிவு செய்தாலும் சரி அனைவரும் யுபிஐ மூலம் தான் பணம் செலுத்தி வருகிறோம். இருப்பினும் பல நேரங்களில் அவசரத்தில் பணம் அனுப்பும்போது, பணம் தவறான கணக்கிற்கு சென்று விட்டால் என்ன செய்வது? இது போன்ற சம்பவம் உங்களுக்கு நடந்தால் பீதியடைய வேண்டாம். அதற்கு ஆர்பிஐ சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் பணத்தை எளிதில் திரும்பப் பெறலாம்.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வழிகாட்டுதல்களின்படி நீங்கள் தவறுதலாக வேறு UPI கணக்கிற்கு அல்லது வேறு இன்டர்நெட் பேங்கிங் கணக்கிற்கு பணம் அனுப்பி விட்டால் உடனடியாக 18001201740 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த நம்பரை அழைத்து உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.

அதன் பிறகு பணம் செலுத்தப்பட்ட கணக்கு எண் மற்றும் பரிவர்த்தனை நேரம் உட்பட சில விவரங்களை வழங்க வேண்டும். நீங்கள் உங்கள் பிரச்சனை குறித்து வாடிக்கையாளர் சேவைக்கு தெரிவிக்கலாம். தகவல் சரிபார்க்கப்பட்டால் உங்களுடைய பணம் 48 மணி நேரத்திற்குள் உங்கள் கணக்கிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும்.
வங்கி கிளையைத் தொடர்பு கொள்ளலாம்: UPI அல்லது இன்டர்நெட் பேங்கிங் சேவை மூலம் தவறாக பணம் செலுத்தி விட்டால் உங்கள் வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்யலாம். தவறான ஆன்லைன் கட்டணத்தின் விவரங்களை வழங்குவதற்கு படிவத்தை நிரப்ப வேண்டும். அதன் பின்னர் அந்த படிவத்தில் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை வழங்க வேண்டும்.
குறிப்பாக பரிவர்த்தனை எண், தேதி, தொகை மற்றும் பணம் அனுப்பப்பட்ட தவறான கணக்கு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும். வங்கி ஒத்துழைக்கவில்லை அல்லது உதவ முன்வரவில்லை என்றால் bankingombudsman.rbi.org.in என்ற முகவரியிலும் புகாரை பதிவு செய்யலாம். ஆர்பிஐ வழிகாட்டுதல்களின் படி நீங்கள் புகாரை பதிவு செய்து விட்டால் 48 மணி நேரத்திற்குள் பணத்தை திருப்பி வழங்குவது வங்கியின் பொறுப்பாகும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications