நடப்பு ஆண்டில் இந்தியாவின் மொபைல் ஏற்றுமதியில் இதுவரையில் 40% ஐபோன்கள். பிஎல்ஐ திட்டத்திற்கு மிக நன்றிகள். ஏப்ரல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பி எல் ஐ திட்டத்தின் மூலம் ஏற்றுமதியானது 50,000 கோடி ரூபாயினை தாண்டியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 110% அதிமாகும். இந்த விகிதமானது இனி வரவிருக்கும் ஆண்டுகளில் இனியும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் உற்பத்தியாளர்கள்
இதில் முக்கிய பங்களித்தவர்கள் ஃபாக்ஸ்கான், பெகட்ரான் & விஸ்ட்ரான் & சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும், இந்தியாவில் சுமார் 40% ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது ஐபோன் தான் என, ஜி20 அமைப்பின் இந்திய குழுவின் தலைவரும், முன்னாள் நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியுமான அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
பி எல் ஐ திட்டம்
இதில் அரசின் ஆத்ம நிர்பார், மற்றும் பி எல் ஐ (PLI) திட்டங்களீன் பங்கு முகிய பங்காகும். இந்த திட்டங்களின் மூலம் 14 துறை சார்ந்த இந்திய உற்பத்தி திட்டத்தினை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நாட்டின் உற்பத்தியினை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சார்பு இந்தியா திட்டம்
இதன் மூலம் இந்தியா தனது மேக் இன் இந்தியா பொருட்களை அதிகரிக்கும். இதனை உலகம் முழுக்க விரிவாக்கம் செய்யும். இது முதலீடுகளை அதிகரிக்க உதவும். சர்வதேச சந்தையில் இந்திய பொருட்களை விரிவுபடுத்தும். இது ஏற்றுமதியினை அதிகரிகும். எல்லாவற்றுக்கும் மேலாக தற்சார்பு இந்தியா திட்டத்தினை வலுப்படுத்தும். இது மற்ற நாடுகளை இந்தியா சார்ந்திருப்பதை குறைக்கும்.
சில தினங்களுக்கு முன்பு சலுகை
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அரசு சில நிறுவனங்களுக்கு ஊக்க சலுகைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. பாக்ஸ்கான் இந்தியா மற்றும் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கும் அரசு, 357.17 கோடி ரூபாய் மற்றும் 58.29 கோடி ரூபாய் ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளித்தது.
ஆப்பிள்
ஏற்கனவே சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் சீனாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், சீனாவுக்கு வெளியே தங்களது உற்பத்தியினை திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே சென்னையில் தனது உற்பத்தியினை ஆரம்பித்துவிட்டது. ஆப்பிள் போனுக்கான உதிரி பாகங்கள் சப்ளைக்காக ஓசூரில் ஆலை அமையவுள்ளது. இது மேற்கொண்டு இந்தியாவில் எதிர்காலத்தில் ஆப்பிளின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். இது சீனாவினை சார்ந்திருப்பதை குறைக்க வழிவகுக்கலாம்.
உற்பத்தி அதிகரிக்கலாம்
எல்லாவற்றுக்கும் மேலாக சீனா அமெரிக்க இடையேயான பதற்றம், அங்கு அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் என பலவும் இந்தியாவுக்கு வாய்ப்பாக அமையலாம் என்றும் கூறுகின்றனர். இதற்கிடையில் இந்திய அரசின் பி எல் ஐ திட்டமானது நிச்சயம் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கலாம். இது மேற்கொண்டு இங்கு உற்பத்தியினை அதிகரிக்க தூண்டலாம்.
பொருளாதார இலக்கு
இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனலாம். மொத்தத்தில் அரசின் பொருளாதார இலக்கினை எட்ட இது சரியான வாய்ப்பாக அமையலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications