இந்தியாவில் அனைவருக்கும் வங்கி கணக்கும், நிதி சேவைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஜன் தன் யோஜனா முதல் பல முயற்சிகளை எடுத்து வரும் வேளையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வங்கி கணக்கு திறக்க முடியாமல் அவதிப்படும் வேளையில், அவரின் பிரச்சனையை இந்திய மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக பாலிவுட் கிங் ஷாருக் கான்-ஐ டேக் செய்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
பிரக்யா பிரசூன் சிங்- ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் இவர், ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டரில் பிரக்யா செய்த பதிவு பெரும் தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

பிரக்யா பிரசூன் சிங் போன்ற ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்கள் வாழ்வில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல பல உதவிகள் கொடுக்கப்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பிரச்சனையை தான் பிரக்யா பிரசூன் சிங் தற்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
பிரக்யா பிரசூன் சிங்-ன் ஆசிட் வீச்சில் முகம் சிதைந்துள்ள நிலையில் அவருக்கு வங்கிக் கணக்கை திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. வங்கி கணக்கு திறக்கும் போது KYC செயல்முறை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயம். அப்படியிருக்கையில் KYC செயல் முறையின் போது பிரக்யாவின் கண் சிமிட்ட முடியாததால் பயோமெட்ரிக் ஸ்கேனிங் செய்ய முடியாமல் போனது.
இதனால் அவர் வங்கி கணக்கை திறக்க முடியாமலும், அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை வங்கிச் சேவைகள் அவருக்கு கிடைக்காமலும் போய்விட்டது. இந்த சம்பவத்தை டிவிட்டரில் பிரக்யா பிரசூன் சிங் அனைத்து தரப்பு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பதிவிட்டது மட்டும் அல்லாமல் பாலிவுட் கிங் ஷாருக் கான் மற்றும் மீர் அறக்கட்டளையை டேக் செய்துள்ளார்.

மீர் அறக்கட்டளை என்பது ஷாருக் கான் நடத்தும் ஒரு தொண்டு நிறுவனமாகும், இது ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான அறுவை சிகிச்சைகளுக்கு நிதியளிக்கிறது. ஷாருக் கான் மற்றும் மீர் அறக்கட்டளை டேக் செய்து இந்த உலகை ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள வாழ்வதற்கானதாகவும் மாற்றுங்கள் என தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதோடு பிரக்யா பிரசூன் சிங் தனது பிதிவில் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தீப் பக்ஷி டேக் செய்து வங்கியின் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வந்து கண் சிமிட்ட முடியாமல் இருக்கும் என்னை போன்றவர்களுக்கும் வங்கி சேவைகள் பெறுவதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய கூறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications