இந்தியாவின் முன்னணி வர்த்தக மாநிலங்கள் மத்தியில் யார் அதிகப்படியான முதலீட்டையும், நிறுவனங்களை ஈர்த்து லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பதில் மிகப்பெரிய போட்டி இருந்து வருகிறது.
இப்போட்டியில் முதலில் தமிழ்நாடு முதன்மையாக இருந்தாலும், அடுத்தடுத்து கர்நாடகா, ஆந்திரா பிரதேசம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாகக் கர்நாடாக அரசு ஸ்மார்ட்போன் தயாரிப்பு முதல் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு வரையில் பல முக்கிய நிறுவனங்களின் மிகப்பெரிய முதலீட்டை கைப்பற்றியுள்ளது.
ஏசிஎம்இ கிளீன்டெக் சொல்யூஷன்ஸ்
குருகிராம்-ஐ தலைமையிடமாகக் கொண்டு ரினியூவபிள் எனர்ஜி துறையில் இயங்கி வரும் ஏசிஎம்இ (ACME) கிளீன்டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனம், வருடத்திற்கு 1.2 மில்லியன் டன் (எம்டிபிஏ) கிரீன் ஹைட்ரஜன், அம்மோனியா உற்பத்தி ஆலை, அதனுடன் சோலார் பவர் பிளான்ட் ஆகியவற்றை அமைக்கச் சுமார் ரூ.52,000 கோடி முதலீடு செய்யக் கர்நாடக அரசுன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பசவராஜ் பொம்மை
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, எரிசக்தி அமைச்சர் வி.சுனில் குமார், கூட்டுறவு அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் ஆகியோர் முன்னிலையில் கர்நாடக அரசு சார்பாகக் கூடுதல் தலைமைச் செயலாளர் (தொழில்துறை) ஈ.வி. ரமண ரெட்டி மற்றும் ஏசிஎம்இ குழுமத் தலைமை இயக்க அதிகாரி சந்தீப் காஷ்யப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
கிரீன் ஹைட்ரஜன் கொள்கை
கிரீன் ஹைட்ரஜன் கொள்கை வடிவமைப்பதில் கர்நாடக அரசு அதிவீரமாக பணியாற்றி வரும் நிலையில் ACME குழுமத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டார். இதேபோல் ACME நிறுவனத்திடம் தொழிற்சாலை கட்டுமானத்தில் இருந்து இயக்கம் வரையில் காலக்கெடுவை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
1800 பேருக்கு வேவைவாய்ப்பு
ACME நிறுவனம் அடுத்த ஐந்தாண்டு காலத்தில் இரண்டு கட்டங்களாகத் தொழிற்சாலையை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இந்தத் 52000 கோடி ரூபாய் முதலீட்சு திட்டம் மூலம் 1800 பேருக்கு வேவைவாய்ப்பு உருவாக்க முடியும்.
டாவோஸ் - ரீநியூ பவர்
அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்ட ரீநியூ பவர் கர்நாடக மாநிலத்தில் எனர்ஜி திட்டங்களில் அடுத்த ஏழு ஆண்டுக் காலத்தில் சுமார் 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக இம்மாநில அரசுடன் டாவோஸ் பொருளாதார மாநாட்டில் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications