வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் சில மாற்றங்களை அவ்வப்போது செய்யும். அந்த வகையில் தற்போது எம்பிளாய்மெண்ட் லிங்க்டு இன்செண்டிவ் திட்டத்தின் கீழ் சலுகைகளை பெறுவதற்கும், யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கும், வங்கி கணக்கை ஆதார் நம்பருடன் இணைத்து ELI திட்டத்தின் மூலம் பலன் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
UAN என்பது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் என்பதாகும். இந்த யுஏஎன் நம்பரை வைத்து தான் ஒரு ஊழியர் வெவ்வேறு நிறுவனங்களில் உள்ள வெவ்வேறு இபிஎப் கணக்குகளை ஒருங்கிணைக்க முடியும். இந்த ஒரு நம்பரை வைத்து பிஎஃப் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது? ஊழியரின் பங்களிப்பு, முதலாளியின் பங்களிப்பு போன்ற விஷயங்களை ஆன்லைன் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

நம்பரை இணைப்பதற்குமான கடைசி தேதி 2025 ஆம் ஆண்டின் ஜூன் 30-ம் தேதி வரை நேத்திக்கப்பட்டுள்ளது இந்த காலக்கேடு இதற்கு முன்னர் பலமுறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்த யுஏஎன் நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கும், வங்கி கணக்குடன் ஆதார் நம்பரை இணைப்பதற்குமான கடைசி தேதி 2025-ஆம் ஆண்டின் ஜூன் 30-ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் மே 30ஆம் தேதி அன்று EPFO அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையில், UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கும், வங்கி கணக்கில் ஆதார் நம்பரை இணைப்பதற்கு ஜூன் 30, 2025 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
UAN என்றால் என்ன?: UAN என்பது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் அதன் ஊழியருக்கு வழங்கப்படும் 12 இலக்கப் பிரத்தியேக எண். இது ஊழியர்களின் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு முதலாளிகளிடமிருந்து பிஎஃப் கணக்குகளை நிர்வகிக்கும் நம்பராக செயல்படுகிறது.
ஆதாரைப் பயன்படுத்தி UAN-ஐ எவ்வாறு ஆக்டிவேட் செய்வது?:
ஸ்டெப் 1: முதலில் EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: "இம்பார்ட்டெண்ட் லிங்ஸ்" என்ற செக்சனுக்கு கீழ் "ஆக்டிவேட் UAN" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்களுடைய UAN நம்பர், ஆதார் நம்பர், பெயர், பிறந்த தேதி, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் ஆகியவற்றை வழங்கவும். உங்களுடைய மொபைல் நம்பரை வழங்கி OTP பெறவும்.
ஸ்டெப் 4: அதன் பிறகு "கெட் ஆதரிசேஷன் பின்" என்பதை கிளிக் செய்யவும். உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். OTP-ஐ வழங்கி செயல்முறையை முடிக்கவும்.
யுஏஎன் நம்பரை ஆக்டிவேட் செய்த பிறகு உங்களுக்கு ஒரு பாஸ்வேர்ட் அனுப்பப்படும். ஊழியர்கள் தங்கள் PF கணக்குகளை நிர்வகித்தல், பிஎப் பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்தல், பணம் திரும்பப் பெறுதல் அல்லது பிற பரிமாற்றங்களுக்கு யுஏஎன் நம்பரைப் பயன்படுத்தலாம்.
ஊழியர்கள் ஏன் இதை செய்ய வேண்டும்?: எம்பிளாய்மெண்ட் லிங்க்ட் இன்சென்டிவ் திட்டத்தின் கீழ் பலன்களை விரும்பும் ஊழியர்கள் யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். அதோடு வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்திருப்பதும் அவசியம். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் இந்த புதிய திட்டத்தை அறிவித்தார். தற்போது மூன்று வகையான ELI திட்டங்கள் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications