மும்பை: பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை கஜோலின் கணவருமான அஜய் தேவ்கன் மும்பையில் அலுவலக இடங்களை லீசுக்கு விடுவது தெரிய வந்துள்ளது. அஜய் தேவ்கன் இந்தி திரையுலகில் பரிச்சையமானவர். அவரது மனைவில் கஜோல் இந்தி மட்டுமல்லாது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.
இந்த தம்பதியினர் மும்பையில் கமர்ஷியல் இடங்களை வாங்கி லீசுக்கு விடுத்து வருகின்றனர். அந்த வகையில் அஜய் தேவ்கனுக்கு சொந்தமாக மும்பை அந்தேரி பகுதியில் உள்ள வீர தேசாய் சாலையில் இருக்கும் அலுவலக இடம் ஒன்று அமைந்திருக்கிறது.

அவர் இதனை செப்டம்பர் 2ஆம் தேதி அன்று மாதத்திற்கு 7 லட்சம் ரூபாய் வாடகை என்ற அளவில் லீசுக்கு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்கொயர் யார்ட்ஸ் என்ற தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்காக அஜய் தேவ்கன் தரப்பில் லீஸ் மற்றும் லைசன்ஸ் உரிமத்திற்காக 1.2 லட்சம் வரியாக செலுத்தப்பட்டிருக்கிறது.
லோட்டஸ் டெவலப்பர்ஸ் நிறுவனத்தால் சிக்னேச்சர் டவர் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலக தளம் 3,455 சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த அலுவலக தளத்தை அஜய் தேவ்கனிடமிருந்து கபீர் கான் என்டர்டைன்மென்ட் எல்எல்பி என்ற நிறுவனம் லீசுக்கு எடுத்து இருப்பதாக ஸ்கொயர் யார்ட்ஸ் தளம் கூறுகிறது. ஐந்தாண்டு காலத்திற்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 30 லட்சம் ரூபாயை செக்யூரிட்டி டெபாசிட்டாக செலுத்தப்பட்டிருப்பதாக இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
இந்த அலுவலக தளத்தோடு மூன்று கார் பார்க்கிங் இடங்களும் உள்ளடங்கும். அஜய் தேவ்கன் மற்றும் அவரது மனைவி கஜோலை பொறுத்தவரை இதே பகுதியில் சொந்தமாக பல்வேறு சொத்துக்களை பராமரித்து வருகின்றனர். பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் மும்பையில் வீடு உள்ளிட்டவை மட்டும் அல்லாமல் இது போன்ற கமர்ஷியல் இடங்களிலும் அதிகளவு முதலீடு செய்துள்ளனர். இவற்றை வாடகைக்கு விடுவது மற்றும் லீசுக்கு விடுவதன் மூலம் கணிசமான தொகையை வருமானமாக ஈட்டி வருகின்றனர்.
கார்த்திக் ஆரியன், அமிதாப் பச்சன், சாரா அலி கான் உள்ளிட்ட பலரும் மும்பையின் பிரதான பகுதிகளில் இது போன்ற கமர்ஷியல் தளங்களை அலுவலகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள் ஆகிய தொழில்களுக்கு வாடகைக்கு விடுகிறார்களாம். அஜய் தேவ்கனை பொறுத்தவரை அவரது சொத்து மதிப்பு சுமார் 500 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது அதேபோல அவரது மனைவி கஜோல் 240 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications