மணிரத்னம் இயக்கி வரும் ThugLife படத்தின் மூலம் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு விண்வெளி நாயகன் என்ற புதிய பெயர் கிடைத்துள்ளது. இந்த பெயருக்கு ஏற்றார்போல் உலகம் முழுவதும் தற்போது திரும்பி பார்க்க வைக்கும் ஒரு நடிகராக உயர்ந்து வருகிறார். அதிலும் குறிப்பாக உலகளாவிய டெக் மற்றும் ஐடி ஊழியர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்.
கடந்த வாரம் perplexity நிறுவனத்தின் நிறுவனர் அரவிந்த்-ஐ சந்தித்து அவர் வெளியிட்ட போட்டோ சினிமா துறையைத் தாண்டி டெக் துறையில் பேசப்பட்டது. தற்போது Replit என்ற நிறுவனம் குறித்துப் பேசி மீண்டும் டெக் துறை மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் கமல்ஹாசன் Replit குறித்துப் பேசிய வீடியோவை Replit நிறுவன சிஇஓ டிவிட்டரில் ஷேர் செய்து நம்முடைய விண்வெளி நாயகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் FICCI - MEBC நடத்திய ஒரு நிகழ்ச்சியில், நடிகை திரிஷா மற்றும் கமல்ஹாசன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஜென் Z தலைமுறையினர் உடனான அவரது தொடர்பு மற்றும் புரிதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திரிஷா, தற்போதைய இளம் தலைமுறையினரின் டிரென்டிங் மற்றும் பழக்க வழக்கமுடன் தனக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். அவர்களின் கலாச்சாரம் மற்றும் டிஜிட்டல் லேண்ட்ஸ்கேப்-ஐ புரிந்துக்கொள்ளவது தனக்குச் சவாலாக இருப்பதாக அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
ஆனால், என்னை விட கமல்ஹாசன்-க்கு Gen Z குறித்து அதிகம் புரிதல் இருக்கும் என கைகாட்டினார். ஜென் Z தலைமுறையினர் குறித்தும், வேகமாக மாறி வரும் டிஜிட்டல் லேண்ட்ஸ்பேக் குறித்து கடந்த வாரம் தான் கற்றது, இந்த வாரம் என்னால் பயன்படுத்த முடியவில்லை எனக் குறிப்பிட்டார் திரிஷா.
அப்போது, கமல்ஹாசன் திரிஷா பேசும் போது குறுக்கிட்டு, புதிய வளர்ச்சிகள் குறித்து தொடர்ந்து நினைவில் வைத்திருப்பது சாத்தியமற்றது, உதாரணமாகச் செயற்கை நுண்ணறிவு துறையில் பாடம் புகட்டி வரும் ஒருவருடன், தான் சமீபத்தில் பேசிக்கொண்டு இருந்தாகவும், அப்போது நான் குறிப்பிட்ட ஒரு கோடிங் தளத்தைப் பற்றி அவருக்குத் தெரியவே தெரியவில்லை என கமல்ஹாசன் தெரிவித்தார்.

அம்ஜத் மசாத் என்பவரால் உருவாக்கப்பட்ட Replit.com என்ற அந்த தளம், பள்ளி மாணவர்கள் கம்பியூட்டர் கோடிங் திறன்களை வளர்த்துக்கொள்ளப் பெரிய அளவில் உதவுவதால், சில அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் இத்தளத்தைத் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறிப்பிட்டார் கமல்ஹாசன்.
இந்த காணொளியை Replit.com தளத்தை உருவாக்கிய அம்ஜத் மசாத் டிவிட்டரில் பதிவிட்டு கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் தளம் குறித்துத் தெரிந்துள்ளது என்பதில் பெரும் மகிழ்ச்சி, எங்களுடைய தளத்தை பலருடன் அவர் பகிர்ந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications