தமிழ், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து நாடு முழுவதும் ரசிகர்களை வைத்திருப்பவர் தான் நடிகர் ஆர்.மாதவன். இவர் வங்கியில் பணம் வைத்திருப்பதை நான் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் என கூறியுள்ளார்.
மாதவன் நடிப்பில் அண்மையில் இஷா பராபர் என்ற படம் ஓடிடியில் வெளியானது . வங்கி கணக்குகளில் நடைபெறும் பண மோசடிகள் பற்றிய படம் இது. இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் மாதவன் படம் குறித்த பல்வேறு விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தான் இளமையாக இருந்தபோது வங்கி பாஸ் புக்கை வைத்துக்கொண்டு வங்கியில் எவ்வளவு பணம் கையிருப்பாக இருக்கிறது என்பதை நான் அடிக்கடி சரி பார்ப்பேன். ஆனால் அந்த நடைமுறை தற்போது மாறிவிட்டது என்றார்.
"வங்கி கணக்கை நினைத்தால் எனக்கு அச்சமாகத்தான் இருக்கிறது , என்னுடைய வங்கி கணக்கில் இப்பொழுது எவ்வளவு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அதை ஆராய்ந்து பார்த்தால் என்னவாக இருக்கும் என்றும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வங்கி கணக்கில் பணம் இருப்பதை நினைத்தால் அச்சமாக இருக்கிறது" என்றார். வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் எந்த வயதை எட்டினாலும் புதிய புதிய திறன்களை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். கப்பல்களை, படகுகளை இயக்குவதற்கான கேப்டன் லைசென்ஸை நான் பெற்று இருக்கிறேன் என கூறிய மாதவன், எல்லோரும் நான் மிகப்பெரிய சொகுசு கப்பலை வைத்திருப்பதாக கூறுகிறார்கள், ஆனால் அப்படி கிடையாது நான் ஒரு எளிமையான சாதாரணமான படகை தான் சொந்தமாக வைத்திருக்கிறேன்.
என்னுடைய குடும்பத்திற்கு அது போதுமானது எனக்கு நீண்ட காலமாகவே கேப்டன் உரிமம் வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய திரைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என்றார்.
கொரோனா காலகட்டத்தில் கப்பல்களையும் படகுகளையும் இயக்குவது தொடர்பாக கற்றுக் கொண்டேன் மற்றவர்கள் நினைப்பது போல அது கடினம் கிடையாது . 10 லிருந்து 15 நாட்கள் படிக்க வேண்டும், தேர்வு எழுத வேண்டும் பிராக்டிக்கலாக அதனை செய்து காட்ட வேண்டும். பின்னர் உங்களுக்கு உரிமம் கிடைத்துவிடும் எனக் கூறினார்.
மாதவன் தற்போது தமிழ்நாட்டில் ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் படத்தில் ஜி டி நாயுடுவாக நடிக்கிறார். ஏற்கனவே மாதவன் இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட ராக்கேட் தி நம்பி எஃபெக்ட் படத்தை எழுதி இயக்கி நடித்திருந்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications