சினிமா துறையில் நடிகர் சூர்யா என்கிற சரவணன் சிவக்குமார் இன்று உள்நாட்டிலும் வெளியிலும் பெரிய ரசிகர்களைக் கொண்ட நடிகராக வலம் வருகிறார். இவரது காலடி தமிழ் சினிமாவில் மட்டும் இருந்தாலும், நாட்டிலேயே ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சரவணன் சிவக்குமார் என்ற பெயரில் பிறந்த சூர்யா தற்செயலாக திரையுலகில் நுழைந்தார். நடிகர் சிவகுமாரின் மகனாக இருந்தாலும் தொழிலதிபராக வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. இதற்காக அவர் தனது இளமை பருவத்தில் திருப்பூரில் ஒரு ஆடை தொழிற்சாலையில் வேலை செய்தார்.
ஆனால் வீட்டில் இருந்த கஷ்டமான நிதி நிலைமை அவரை கேமரா முன் கொண்டு வந்தது. இவர் பிங்க்வில்லா என்ற தனியார் நிறுவனத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். அவரது கடந்த கால வாழ்க்கையை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். முதலில், தான் திருப்பூரில் ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் 15 நாட்கள் நான் பயிற்சியாளராக இருந்ததாகவும், அப்போது எனது சம்பளம் ரூ.750 என்று கூறினார். அந்த நேரத்தில், முதல் ஆறு மாதங்களுக்கு நான் ஒரு நடிகரின் மகன் என்பது அவர்களுக்குத் தெரியாது. அப்போது எனது மாதச் சம்பளம் 1200 ரூபாய்தான் என்று கூறியுள்ளார். அங்கு சுமார் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்ததாகவும், அதன்பின் சம்பளம் ரூ.8,000 ஆக உயர்ந்து விட்டது என்று கூறியுள்ளார்.

ஒருமுறை காலை உணவு சாப்பிடும் போது அவருடைய அம்மா தன்னிடம் 25,000 ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கூறியதாகவும், அது அப்பாவுக்கு அது தெரியாது என்றும் கூறியுள்ளார். அப்பா ஒரு நடிகர், எதற்காக அம்மா கடன் வாங்கினார், சேமிப்பு என்ன ஆனது என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்ததாக சூர்யா கூறியுள்ளார். அப்போது, குடும்பத்தின் வங்கி இருப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியதில்லை என்ற உண்மையும் அப்போதுதான் அவருக்குத் தெரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை தனது சம்பளத்தை ஒருபோதும் கேட்கவில்லை என்றும், தயாரிப்பாளர்கள் பணம் கொடுப்பதற்காக காத்திருப்பதாகவும் சூர்யா கூறினார். அப்பா அதிக படங்களோ ப்ராஜெக்ட்களோ செய்யாத காலம் அது. சுமார் 10 மாதங்கள் இடைவெளி இருந்தது. அந்த 25,000 ரூபாயைத் திருப்பிக் கொடுக்க அம்மா கஷ்டப்படுவதைப் பார்த்ததும், என்ன செய்யலாம் என்று யோசித்ததாக சூர்யா மேலும் கூறினார்.
சூர்யா சொந்தமாக தொழிற்சாலை தொடங்க யோசித்துள்ளார். தன்னுடைய தொழிற்சாலைக்கு அப்பா குறைந்தது ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்வார் என்று சூர்யா நினைத்தார். சொந்தமாக ஏதாவது தொடங்குவதற்கான அனுபவத்தைப் பெற சூர்யா வேறொரு இடத்தில் பணியாற்றினார். ஆனால் அம்மாவுடனான உரையாடல் எல்லாவற்றையும் மாற்றியது. தன் தந்தையால் தனக்கு உதவ முடியாது என்பதை உணர்ந்ததாக கூறினார்.
இந்த நேரத்தில் தான் சூர்யா தனது பரம்பரை காரணமாக தனக்கு கிடைத்த நடிப்பு வாய்ப்புகளை நினைவு கூர்ந்தார். திரையுலகின் ஒரு பகுதியாக இருக்க விரும்பாத சூர்யா, கேமரா முன் வந்தார். பணத்துக்காக சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்தவர். அம்மாவின் கடனை அடைப்பதே என் மனதில் இருந்த முதல் குறிக்கோள் என்று கூறி சினிமாவில் நுழைந்துள்ளார். பின்னர் சினிமா அவரது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியது. அவர் இப்போது தனது ரசிகர்களால் அதிகம் வளர்க்கப்பட்டவராக உள்ளார். பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தற்போது சூர்யாவின் பான் இந்தியா படமான கங்குவா நவம்பர் 14 அன்று ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் பாபி தியோல் மற்றும் திஷா பதானி ஆகியோரும் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications