தமிழ் சினிமாவே இவர் கையில் தான் என சொல்லும் அளவுக்கு இவருடைய படம் வெளி வரும் நாளில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் தீபாவளி, பொங்கல் பண்டிகை தான். 1974 ஆம் ஆண்டு பிறந்து இன்று 49 வது பிறந்த நாள்-ஐ கொண்டாடும் தளபதி விஜய்-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஒரு சினிமா நடிகரை ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்வி அதிகம் எழும் வேளையிலும் விஜய் தனது ரசிகர் படையை நாளுக்கு அதிகரித்து வருகிறார். 4- 5 வயது குழந்தை முதல் 60 -70 வயது தாத்தா பாட்டி வரையில் தனது ரசிகர்களாய் கொண்டு உள்ளார். 49 வயதிலும் தாறுமாறாக டான்ஸ் ஆடும் அவருடைய பிட்னஸ் விஜய்-க்கு பெரிய பிளஸ்.

இதேபோல் விஜய் கடந்த 10 வருடத்தில் தேர்வு செய்யும் கதை, தயாரிப்பாளர், ப்ரோமோஷன் செய்யும் விதம் என பலவற்றை மேம்படுத்தியதன் விளைவாக அவருடைய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸ்-ல் அள்ளுகிறது. அதிலும் குறிப்பாக ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் என எவ்விதமான வித்தியாசமும் இல்லாமல் கல்லாக்கட்டுகிறது.
ஒவ்வொரு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியிலும் விஜய்-யின் பேச்சு, குட்டி கதை சொல்லும் விதம் ஆகியவை படத்தின் பர்மோஷனுக்கு பெரிய அளவில் உதவியுள்ளது. இதனால் விஜய்-யின் சம்பளம் ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாயை தாண்டியது மட்டும் அல்லாமல் படத்தின் கலெக்ஷனும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
1984ல் வெளியான வெற்றி, குடும்பம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 18 வயதில் நாளை தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ள லியோ படம் வரையில் 67 படத்தில் ஹீரோவாகவும், மொத்தம் 78 படங்களில் பாக்ஸ் ஆபீஸ்-ல் அள்ளிய டாப் 10 படங்கள் எது..?
விஜய் - ஸ்ரூதி ஹாசன் நடித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட புலி படம் 101.9 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதை தொடர்ந்து 111 கோடி ரூபாய் வசூல் உடன் பைரவா, 143.6 கோடி ரூபாய் வசூல் உடன் தெறி, 244.8 கோடி ரூபாய் வசூல் உடன் மெர்சல், 252 கோடி ரூபாய் வசூல் உடன் சர்கார், 223 கோடி ரூபாய் உடன் பிகில், 223 கோடி ரூபாய் வசூல் உடன் மாஸ்டர், 216.58 கோடி ரூபாய் வசூல் உடன் பீஸ்ட், 300 கோடி ரூபாய் வசூல் உடன் வாரிசு ஆகியவை அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களாகும்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய அளவில் உருவாகி வரும் லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் திரைக்கதையை ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தியுடன் இணைந்து எழுதிய லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது
லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மன்சூர் அலி கான் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
லியோ படத்தின் நான் ரெடி பாடல் இன்று வெளியாக உள்ள நிலையில், நேற்று வெளியான ப்ரோமோ இதுவரையில் 7 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த ப்ரோமோ கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது, முழு பாடல் எப்படி இருக்கும் என்பதை பார்போம்.


Click it and Unblock the Notifications