'நாம் வாழும்போது எத்தனை பேர் நம்மை நினைக்கின்றனர் என்பது முக்கியமல்ல. நாம் இறந்தபின்னரும் எத்தனை பேர் நம்மைப் பற்றி நினைக்கின்றனர் என்பது தான் நாம் வாழ்ந்ததற்கு அர்த்தம் என்று சொல்வேன். இதற்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம். நான் மறைந்த பிறகும் எத்தனை பேர் என்னை நினைக்கின்றனர் என்பது தான் நான் வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கிறது என்று கொள்ள முடியும் எனச் சொல்வேன்' என்று ஒரு மேடையில் பேசினார் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசினார். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தமாக விளங்கியவர் நடிகர் விஜயகாந்த்.
அவரது சின்னக்கவுண்டர் படத்தில் இடம்பெற்ற 'அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே!' 'இந்த பூமியைப் போல குணம் படைத்த தென்னவனே!' என்ற பாடல் விஜயகாந்துக்காகவே எழுதப்பட்டதாக காலத்தால் அழியாதிருக்கும்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் காலமாகிவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
அவரது மறைவு சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் சாமானிய மக்களையும் பெரிதாக பாதித்திருக்கிறது. நீண்ட நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் எப்படியாவது தேறி மீண்டு வருவார் என கோடிக்கணக்கான மக்கள் வேண்டிக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட மனிதரை கௌரவிக்கும் வகையில் நடிகர் விஜயகாந்த்துக்கு முழு அரசியல் மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சினிமாவில் தொடக்கக்காலத்திலேயே சூட்டிங்கில் கீழ்நிலை ஊழியர்களின் நலனில் அக்கறை காட்டி வந்தவர் நடிகர் விஜயகாந்த். தான் நடித்த ஒரு சூட்டிங்கில் அடிபட்டு இறந்த ஸ்டண்ட் நடிகரின் குடும்பத்துக்கு ஒரு பெரிய நிதியை வழங்கி உதவினார்.
1997 ஆம் ஆண்டு தினமணி நாளிதழின் அப்போதைய ஆசிரியர் ராம.திரு.சம்பந்தம். ஒரு கூலித்தொழிலாளி மகளுக்கு டாக்டர் சீட் கிடைத்தும் பணவசதியில்லாமல் கல்லூரியில் சேரவில்லை. இந்த விஷயத்தில் ஏதாவது நிதியுதவிக்கு ஏற்பாடு செய்து தரமுடியுமா என தினமணி அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்தது. உடனடியாக ஆசிரியர் ராம.திரு.சம்பந்தம் நடிகர் விஜயகாந்துக்கு போன் செய்து இந்த விவரத்தைத் தெரிவித்தார்.
கொஞ்சம்கூட தயக்கமில்லாமல் உடனடியாக அந்த மாணவியின் பெற்றோரை வந்து பார்க்கச் சொல்லுங்கள். அவரது முழுப்படிப்புச் செலவையும் தந்துவிடுகிறேன் என்று கூறினார். அவரது உதார குணத்துக்கு இது மிக எளிமையான எடுத்துக்காட்டு.
வறுமையும், பசிக்கொடுமையும் ஏழைகளின் இணைபிரியா பங்காளிகள். இதை நன்கு உணர்ந்தவர் எம்ஜிஆர். தன்னை சந்திக்க வரும் யாரையும் முதலில் வரவேற்று உணவளித்து உபசரித்துதான் அனுப்புவார். சினிமா துறையில் இது ஓர் அபூர்வமான குணமாகும். எம்ஜிஆர் மறைந்த பின்னர் அவரது இடத்தை விஜயகாந்த் பிடித்தார்.
மனித நேயம் அவரது பிறவி குணமாக இருந்தது. அவரது சினிமா அலுவலகத்தில் எப்போதும் உலை கொதித்துக் கொண்டே இருக்கும். யார் வேண்டுமானாலும் அங்கு சென்று பசியாறி வரலாம். தனது சூட்டிங்கில் தான் சாப்பிடும் அதே உணவு படக்குழுவினர் அனைவருக்கும் வித்தியாசமின்றி வழங்க வேண்டும் என்பது விஜய்காந்தின் கொள்கையாகும்.
பேருக்கு சாப்பாடு போடாமல் ருசியான அசைவச் சாப்பாடு தான் போடுவார். அதை இன்றளவுக்கும் பாராட்டாதவர்கள் இருக்க மாட்டார்கள். அரசியலில் தனது குருவான திமுக தலைவர் மு.கருணாநிதியை எதிர்த்து எதிரணியில் இருந்தபோதும் சரி, கருணாநிதி மறைந்த பின்னரும் சரி என்றைக்குமே அவரை வாஞ்சையுடனும் மரியாதையுடனும் தலைவர் என்றே குறிப்பிடுவார். பெரியவர்களை மதிக்கும் குணம் பெற்றவர்.
எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே அடைக்கமுடியாத நடிகர்கள் சங்கக் கடனை அவர் சங்கத்தின் தலைவரானபின்னர் கடனை முழுவதுமாக அடைத்ததோடு மட்டுமல்லாமல் சங்கத்துக்கு என சொந்தமாக கட்டடம் கட்டுவதற்கான நிதியையும் விஜயகாந்த் திரட்டித்தந்தார்.
2005 செப்டம்பரில் தேமுதிக- வை மதுரையில் தொடங்கிய ஒன்பது மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் ஓர் ஆட்சிமாற்றத்துக்குக் காரணமாக இருந்தார்.
தனக்கு சம்பந்தமே இல்லாத விருத்தாச்சலத்தில் பாமகவின் செல்வாக்கை முறியடித்து 2006இல் எம்எல்ஏ ஆனார்.
அதிமுக வெற்றி பெற வேண்டிய 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதன் வெற்றிவாய்ப்பை தனது கட்சி ஓட்டுக்களால் பிரித்து பறித்தார். இதை உணர்ந்துகொண்ட ஜெயலலிதா அடுத்த தேர்தலில் விஜயகாந்த்துடன் தேர்தல் கூட்டணியை அமைத்தார். அதில் 29 தொகுதிகளைக் கைப்பற்றி கட்சி ஆரம்பித்த ஆறு ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த்.
நடிகர், அரசியல்வாதி என்று மட்டுமல்லாமல் சமூகநல வாதியாக இருந்தார். ஒரு கேப்டனுக்கு தன் அணியினரை அரவணைத்துச் செல்லும் பண்பு வேண்டும். அது அவரிடம் ஏராளமாக நிறைந்திருந்த காரணத்தினால்தான் என்னவோ அவரை கேப்டன் என்ற பட்டப்பெயரோடு அழைக்கப்பட்டது அவருக்குச் சாலப் பொருந்தும். அவரது மறைவு சினிமாத்துறைக்கும் அரசியலுக்கும் மட்டுமல்லாமல் இந்த சமூகத்துக்கு ஒரு பேரிடியாக இருக்கும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications