தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'கோட்' திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) திரைக்கு வருகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இந்தப் படத்தை சுமார் 400 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.
இந்த படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யும் திட்டத்துடன் இன்று காலை இயக்குனர் வெங்கட் பிரபு தனக்கே உரியப் பாணியில் மிகவும் வித்தியாசமாக டிவிட்டரில் தமிழ்நாட்டு முதல்வர் முக ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் வேளையில், முதல்வர் ஸ்டாலின் எலான் மஸ்க் டெஸ்லா தொழிற்சாலையில் சந்திப்பது போல் AI மூலம் போட்டோ உருவாக்கிப் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு டெஸ்லா தமிழ்நாட்டுக்கு வருமே ஆனால் முதல்வர் ஸ்டாலினின் GOAT மூவ் ஆக இது இருக்கும் என GOAT பட இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கோட் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் இயக்குனரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
'கோட்' படம் ஒரு ஆக்ஷன் கதை களத்துடன், ஆரம்பம் முதல் இறுதி வரையில் விறுவிறுப்பான கதைக் களம் கொண்டிருக்கும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் GOAT படப்பிடிப்பு நடைபெற்றது.
தளபதி விஜயுடன் இணைந்து பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நாளை சிறப்பு காட்சி ஒளிபரப்ப அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
முதன்முறையாக வெங்கட் பிரபுவுடன் இணைந்து விஜய் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் கண்டிப்பாக மெகா ப்ளாக்பஸ்டர் ஆகும் என்ற நம்பிக்கையுடன் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.
விஜய்யின் 'கோட்' படம் நாளை உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். இதேவேளையில் கோட் பட நடிகர்கள் சம்பளத்தைப் பார்க்கும் போது தலையே சுற்றுகிறது.
விஜய்: 'கோட்' படத்தில் விஜய் ரூ.200 கோடி பெற்றார், இவரின் சம்பளத்தைத் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரபு தேவா: 'கோட்' படத்தில் விஜயின் நண்பராக நடிக்கும் நடன இயக்குநர் பிரபு தேவா, ரூ.2 கோடி பெற்றார்.
பிரசாந்த்: தமிழ் திரையுலகில் 2வது ரவுண்ட் அடிக்கும் 'டாப் ஸ்டார்' பிரசாந்த், படத்தில் முக்கிய பங்கு வகித்து, தனது நடிப்புக்கு ரூ.75 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.
ஜெயராம்: 'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்த பிறகு விஜயுடன் திரையில் இடம்பிடிக்கும் ஜெயராம், தனது பங்குக்கு ரூ.50 லட்சம் பெற்றார்.
ஸ்னேகா: விஜயுடன் ஜோடியாக நடிக்கும் நடிகை ஸ்னேகா ரூ.30 லட்சத்தை சம்பளமாக பெறுகிறார்.
மோகன்: 90களின் கவர்ச்சியான நடிகர் மோகன், விஜய்க்கு எதிராக வில்லனாக நடித்து தனது நடிப்புக்கு ரூ.40 லட்சம் பெற்றுள்ளார்.
அஜ்மல்: 'கோட்' படத்தில் அஜ்மலின் பங்கு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை, ஆனால் அவருக்கு ரூ.50 லட்சம் சம்பளம் கிடைத்ததுள்ளது.
வெங்கட் பிரபு: வெங்கட் பிரபு, விஜயுடன் தனது முதல் படத்தை இயக்க ரூ.10 கோடி ஊதியம் பெற்றார்.
யுவன் சங்கர் ராஜா: 'கோட்' படத்திற்கு இசை அமைக்க யுவன் சங்கர் ராஜாவுக்கு ரூ.3 கோடி ஊதியம் வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications