தெலங்கானா: இந்தியாவில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் பலரது உயிர்களையே பறிக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கின்றன. ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு லட்சக்கணக்கான பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொள்வது மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
அமலாக்கத்துறை நடவடிக்கை: இந்த சூழலில் இதுபோன்ற சட்டவிரோத சூதாட்ட பிளாட்பார்ம்களுக்கு விளம்பரம் செய்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை விசாரணை தொடங்கி இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிட்டு இருக்கிறது. நடிகர்கள் மட்டும் இல்லாமல் இன்ஃப்ளூயன்சர்களும் யூடியூபர்களும் இந்த விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

புகார் அடிப்படையில் நடவடிக்கை: தெலங்கானாவை சேர்ந்த பணிந்திர சர்மா என்பவர் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்வதால் இந்த வகை சூதாட்ட செயலிகள் மக்களிடையே எளிதாக சென்று சேர்கின்றன , இதனால் மக்கள் பெரிய அளவில் பணத்தை இழக்கின்றனர் என கூறி புகார் அளித்திருக்கிறார். இவ்வகை விளம்பரங்களுக்காக சட்டவிரோதமாக இவர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரகாஷ் ராஜ், விஜயதேவரகொண்டா: இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விசாரணையை தொடங்கி இருப்பதாக தெரிகிறது. இதன்படி நடிகர்கள் பிரகாஷ்ராஜ் , விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால், பிரணிதா , மஞ்சு லட்சுமி ஆகியோரும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருவர் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களும் என மொத்தம் 26 பேர் அமலாக்கத்துறையின் விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

நடிகர்கள் விளக்கம்: இதனிடையே நடிகர் விஜய் தேவரகொண்டா தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில் விஜய் தேவரகொண்டா திறமை அடிப்படையிலான விளையாட்டு என்ற அடிப்படையில் தான் இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து விளம்பரம் செய்ததாகவும், எங்கெல்லாம் சட்டப்பூர்வமாக இந்த விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதோ அங்கு மட்டுமே இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டத்துக்கு புறமான எந்த ஒரு பெட்டிங் தளத்தையும் விஜய் தேவர கொண்டா விளம்பரம் செய்யவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராணா விளக்கம்: நடிகர் ராணா டகுபதி கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே கேமிங் செயலிகள் உடனான தன்னுடைய விளம்பர ஒப்பந்தம் முடிந்து விட்டதாகவும் சட்டபூர்வமாக இந்த விளையாட்டு அனுமதிக்க பட்டிருக்கும் இடங்களில் மட்டுமே இந்த விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது என்றும் தெரிவித்திருக்கிறார். நடிகர் பிரகாஷ் ராஜை பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டு ஜங்கிலி ரம்மி விளையாட்டுக்காக விளம்பரம் செய்தார். ஆனால் ஓராண்டிலேயே அந்த ஒப்பந்தத்தை கைவிட்டு விட்டதாக தெரிவித்தார். சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டிருந்தாலும் என்னுடைய அறத்துக்கு உட்பட்டு இந்த விளையாட்டுகள் சரியில்லை என்பதால் இந்த விளம்பரங்களில் இனி அடிக்கப் போவதில்லை என அவர் கூறியிருந்தார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications