கஜினி, ஹவுஸ்புல் 2, ரெடி, போக்கிரி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை அசின் 2016இல் திருமணம் செய்து கொண்டு திரைப்படத் துறையில் இருந்து விலகினார். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடிகை அசின் நடித்தார். அவரது பல படங்கள் வெற்றிகரமாக ஓடியது. குறிப்பாக கஜினி அவரது மெகா ஹிட் படமாகும். அதன் பின்னர் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் சிஇஓவுமான ராகுல் ஷர்மாவை அசின் திருமணம் செய்து கொண்டார்.

ராகுல் ஷர்மா யார்-
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரும் சிஇவுமானவர் ராகுல் ஷர்மா. மைக்ரோமேக்ஸ் இன்பர்மேடிக்ஸ் நிறுவனத்தை ராகுல் ஷர்மா தனது நண்பர்கள் ராஜேஷ் அகர்வால், விகாஸ் ஜெயின், சுமீத் அரோராவுடன் சேர்ந்து 2000இல் தொடங்கினார்.
2010க்குள் மைக்ரோமேக்ஸ் இந்தியாவின் முன்னணி விலை மலிவான போன் உற்பத்தியாளராக உருவெடுத்தது. தனது தந்தையிடமிருந்து ரூ.3 லட்சத்தை கடனாக வாங்கி தொழில் பயணத்தை ராகுல் ஷர்மா தொடங்கினார். இப்போது ராகுல் ஷர்மாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.1300 கோடி ஆகும்.
கனடா நாட்டின் சாஸ்கட்செவன் பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் இளங்கலை பட்டமும் ராஷ்ட்ரசந்த் துகாட்ஜி மகாராஜ் நாக்ரபூர் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன ஜினியரிங் படிப்பையும் முடித்தார்.
மைக்ரோமேக்ஸ் தவிர ராகுல் ஷர்மா ரிவோல்ட் இன்டலிகார்ப் நிறுவனத்தையும் நிறுவினார். இந்த நிறுவனம் இந்தியாவின் முதல் ஏஐ சார்ந்த எலக்ட்ரிக் பைக்கை 2017இல் தயாரித்தது.
"ஹவுஸ்ஃபுல் 2" இல் அசினுடன் இணைந்து நடித்த அக்ஷய் குமார், 2012 இல் தனது நெருங்கிய நண்பரான ராகுல் ஷர்மாவுக்கு அவரை அறிமுகப்படுத்தி மேட்ச்மேக்கராக இருந்தார். இந்த தம்பதிக்கு தற்போது ஆரின் ரேன் என்ற மகள் உள்ளார்.
வாழ்க்கை பின்னணி: தில்லியில் உள்ள ஒரு பெரிய பண்ணை வீட்டில் வசிக்கும் ராகுல் ஷர்மா மற்றும் அசின் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வழிநடத்துகிறார்கள். பென்ட்லி சூப்பர்ஸ்போர்ட் லிமிடெட் எடிஷன், பிஎம்டபிள்யூ எக்ஸ்6, மெர்சிடிஸ் ஜிஎல்450 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 உள்ளிட்ட சொகுசு கார்களின் கவர்ச்சிகரமான தொகுப்பை ஷர்மா வைத்திருக்கிறார்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications