நடிகை மட்டுமல்ல.. நல்ல முதலீட்டாளரும் தான்.. கேமிங் நிறுவனத்தில் முதலீடு செய்த காஜல் அகர்வால்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென் இந்திய படங்கள் முதல் பாலிவுட் வரையில் தனது நடிப்பின் திறமையை காட்டி வரும் காஜல் அகர்வாலின், அந்த சிரிப்புக்கு மயங்காத இளைஞர்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு அவரின் குழந்தைத்தனமான புன்னகையை ரசிக்க இளைஞர் பட்டாளமே உண்டு.

கண்ணை கவரும் அழகான நடிகையாக மட்டுமே இவரை அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் ஒரு சிறந்த முதலீட்டாளர் என்பதனையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மும்பையை சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அது எவ்வளவு முதலீடு என்று தெளிவாக கூறப்படவில்லை.

கேம்களை அதிகரிக்க திட்டம்
 

கேம்களை அதிகரிக்க திட்டம்

இது குறித்து இந்த நிறுவனம், இந்த நிதியாண்டு இறுதிக்குள் அதன் வருவாயை 50 கோடி ரூபாயாக அதிகரிப்பதை இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மேற்கண்ட இந்த முதலீட்டினை அதன் விரிவாக்க பணிக்காக பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் பிளாட்பார்மில் உள்ள கேம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கேமிங் துறையின் வளர்ச்சி

கேமிங் துறையின் வளர்ச்சி

நாட்டில் டிஜிட்டல் வேகம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக டிஜிட்டல் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வருகின்றது. ஆக இது சரியான நேரம் தான். நான் எப்போதும் ஆர்வமுள்ள விளையாட்டாளர். மேலும் இந்தியாவில் பெண்கள் சிறந்த விளையாட்டாளர்களாக மாற இது வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன் என்று காஜல் பிடிஐக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

என்னென்ன கேம்கள்?

என்னென்ன கேம்கள்?

Okie Gaming ஒரு பேண்டஸி கிரிக்கெட், ஸ்மார்ட் நம்பர் க்விஸ், கிரிகெட் ரம்மி மற்றும் ஸ்மார் சொற்கள் உள்ளிட்ட பல கேம்களைக் கொண்டுள்ள ஒரு தளமாகும். இந்த ஆப்பினை Okie Gaming கூகுளிலும் அல்லது iOS app ஸ்டோர்களிலும் டிசம்பர் மாதத்தில் நடுப்பகுதியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

காஜலின் ஆர்வம்
 

காஜலின் ஆர்வம்

கேமிங் துறையில் காஜல் அகர்வாலின் தனிப்பட்ட ஆர்வம், பரந்த அளவிலான அணுகல் மற்றும் முறையீடு ஆகியவை இந்த நிறுவனத்தினை மேம்படுத்த உதவும் என்று Okie Gaming நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிடின் மசந்த் தெரிவித்துள்ளார். மேலும் காஜல் விருப்பமான முதலீட்டாளர். எங்கள் கேமிங் நிறுவனத்திற்கு தனித்துவமான யோசனைகளையும் நுண்ணறிவுகளையும் கொண்டு வருகிறார் என்றும் ஜிடின் கூறியுள்ளார்.

புதிய விளையாட்டுகளை அதிகரிக்க திட்டம்

புதிய விளையாட்டுகளை அதிகரிக்க திட்டம்

மேலும் எங்களது கேமிங் தளத்தில் எந்த ஒரு நேரத்திலும் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை வைத்திருக்க விரும்புகிறோம். மேலும் சூதாட்ட கேம்களில் இருந்து நாங்கள் விலகியே இருக்கிறோம். நாங்கள் எங்களது தளத்தில் ஐந்து விளையாட்டுகளை வைத்துள்ளோம். ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய விளையாட்டை தொடங்க விரும்புகிறோம் என்றும் ஜிடின் கூறியுள்ளார்.

கேமிங் துறையில் வளர்ச்சி

கேமிங் துறையில் வளர்ச்சி

மார்ச் காலாண்டின் முடிவில் 5 மில்லியன் ஆப்கள் பதிவிறக்கங்கள் செய்வதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார். இந்திய கேமிங் தொழி தற்போது 930 மில்லியன் டாலர் மதிப்புடையது. மேலும் இது ஆண்டுதோறும் 41% வளர்ச்சி காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 2024ல் இந்தியாவின் கேமிங் தொழில் மதிப்பு 3,750 டாலர்களாக அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Actress Kajal aggarwal invested OKIE gaming platform

Indian Actress Kajal aggarwal invested OKIE gaming platform
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X