அதானி-யின் அடுத்த மெகா திட்டம்.. ரூ.1.35 லட்சம் கோடி முதலீடு.. இப்போ அதானி பங்குகளை வாங்கலாமா..?

இந்திய விமானப் போக்குவரத்து துறையில் பயணிகள் எண்ணிக்கை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் அதிகளவிலான பயணிகளை கையாளும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதானி குழுமம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையங்களில் மாபெரும் விரிவாக்க திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் 2ஆம் மற்றும் 3ஆம் நிலை விமான நிலையங்களின் பயன்பாடு மெல்ல மெல்ல உயர்ந்து வரும் வேளையில், இதன் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க பெரு நகரங்களில் இருக்கும் விமான நிலையங்களை மேம்படுத்த வேண்டியது கட்டாயமாகும் நிலையில், அதானி குழுமம் மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளது.

அதானி-யின் அடுத்த மெகா திட்டம்.. ரூ.1.35 லட்சம் கோடி முதலீடு.. இப்போ அதானி பங்குகளை வாங்கலாமா..?

அதானி குழுமம் அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் அதாவது இன்றைய டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பான 90 ரூபாயில் கணக்கிடும் போது சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முதலீடுகள் மூலம் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதன் விமான நிலையங்களில் ஆண்டு பயணிகள் வருகை எண்ணிக்கையை 200 மில்லியன் ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

அதானி குழுமம் ஏற்கனவே தனது கிளை நிறுவனங்களை தனித்தனியாக பிரித்து ஐபிஓ வெளியிட திட்டமிட்ட வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதானி விமான நிலையங்கள் பிரிவை IPO வெளியிடுவதற்கு முன் இந்த 15 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டம் முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் எட்டு விமான நிலையங்களை இயக்கி வருகிறது. அதானியின் விமான நிலைய போர்ட்ஃபோலியோவில் அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், குவஹாத்தி, திருவனந்தபுரம், மும்பை மற்றும் நவி மும்பை விமான நிலையங்கள் உள்ளது.

இதில் நவி மும்பை விமான நிலையம் டிசம்பர் 25 அன்று திறக்கப்பட உள்ளது. இந்த மாபெரும் முதலீட்டு திட்டம் மூலம் பயணிகள் திறன் அதிகரிக்கும். இந்த விமான நிலையம் மும்பை போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என நம்பப்படுகிறது

அதானி குழுமம் 2020-ல் மத்திய அரசு விமான நிலையங்களை தனியார்மயமாக்கல் திட்டத்தில் அதானிக்கு இந்த விமான நிலையங்களை ஒப்படைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது. புதிய முதலீட்டின் மூலம் செய்யப்படும் விரிவாக்கம் இந்த 8 விமான நிலையங்களில் மொத்த பயணிகள் திறனை 60 சதவீதத்துக்கு மேல் உயர்த்தும் என அதானி குழுமம் நம்புகிறது. இதில் புதிதாக திறக்கப்பட உள்ள நவி மும்பை (20 மில்லியன்) மற்றும் குவஹாத்தி (11 மில்லியன்) பயணிகள் எண்ணிக்கை தவிர்த்து கணக்கிடப்படுகிறது.

இந்த 15 பில்லியன் டாலர் முதலீட்டில் 70 சதவீதம் கடன் வாயிலாகவும், 30 சதவீதம் பங்குகள் வாயிலாகவும் திரட்ட உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடன் திரட்டி முதலீடு செய்யப்படும்.

சில நாட்களுக்கு முன்பு அதானி குழுமம் அதன் தலையாய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் கீழ் இயங்கும் பல்வேறு துணை நிறுவனங்களை 2027 முதல் 2031 வரையிலான காலத்தில் பங்குச்சந்தையில் தனித்தனியாக பிரித்து IPO வாயிலாக பட்டியலிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகம் விமான நிலையங்கள், உலோகங்கள், சாலைகள், டேட்டா சென்டர்கள் வர்த்தகத்தின் துணை நிறுவனங்களை தனிதனியாக பட்டியலிட முடிவு செய்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.89 சதவீதம் சரிந்து 2,219 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் 2025ஆம் ஆண்டில் அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை சுமார் 10.38 சதவீதம் சரிந்துள்ளது, வருடத்தின் இறுதிக்கு வந்துள்ள நிலையில் இந்த 10 சதவீத சரிவை ஈடு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் அதானி என்டர்பிரைசஸ் கீழ் பல்வேறு வர்த்தகம் இருக்கும் காரணத்தாலும் இதன் உண்மையான மதிப்பு முதலீட்டாளர்களுக்கு கிடைக்காமல் போகிறது. இதனை உணர்ந்து தான் அதானி என்டர்பிரைசஸ் அதன் துணை நிறுவனங்களை பிரித்து தனியாக பட்டியலிட உள்ளது. நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம், ஆனால் அதானி என்டர்பிரைசஸ்-ன் கடன் அளவுகளையும், லாப அளவுகளையும், அதன் வளர்ச்சி வாய்ப்புகளையும் கணக்கிட்டு முதலீடு செய்யுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+