ஆசியாவின் பெரிய பணக்காரர்களாக இருக்கும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி மத்தியில் முதல் முறையாக ஒரு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளன். பொதுவாக பெரும் தொழிலதிபர்கள் மத்தியில் போட்டி அதிகமாக இருக்கும், ஆனால் அம்பானியும், அதானியும் சற்று வித்தியாசம்.
இருவரின் சாம்ராஜ்ஜியங்களும் வெவ்வேறு துறையில் முதலீடு செய்து வர்த்தகம் செய்து வந்தாலும், தொடர் வர்த்தக விரிவாக்கம் காரணமாகச் சமீப காலமாக இருவரும் பல துறையில் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் தற்போது வரலாற்றில் முதல் முறையாக இரு பெரும் சாம்ராஜ்ஜியமும் ஓரே துறையில் முதலீடு செய்து புதிய பாதையை உருவாக்கியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள அதானி பவர் நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டத்தில் சுமார் 26 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கையகப்படுத்தவுள்ளது. இந்த மின் நிலையத்தின் 500 மெகாவாட் மின்சாரத்தைத் தனது சொந்த தேவைக்காகப் பயன்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த இவ்விரு தொழிலதிபர்களையும் முதன்முதலாக ஒன்றுபட்டுச் செயல்பட முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கத் திருப்பமாகப் பார்க்கப்பட்டாலும் சந்தையில் இவர்களின் ஆதிக்கம் பலரையும் பயமுறுத்துகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் எரிவாயு, ரீடைல் விற்பனை, தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறது. கௌதம் அதானியின் ஆதானி குழுமம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, சுரங்கம் போன்ற கட்டமைப்பு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
பொதுவாக இவ்விரு நிறுவனங்களும் தனித்தனி பாதைகளில் பயணித்து வந்த நிலையில், தற்போது கிளீன் எனர்ஜி துறையில் மட்டும் இருவரும் பல கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
கௌதம் அதானி 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக ஆக வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளார். அதேபோல், முகேஷ் அம்பானி குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் சோலார் பேனல்கள், பேட்டரிகள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்கள் ஆகியவற்றுக்கான நான்கு பெரிய தொழிற்சாலைகளை அமைத்து வருகிறார்.
கௌதம் அதானி சோலார் மாடியூல்கள், காற்றாலை மின்சார ஜெனரேட்டர்கள் மற்றும் ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர்கள் தயாரிப்பதற்காக மூன்று பெரிய தொழிற்சாலைகளையும் கட்டமைத்து வருகிறார்.
மேலும், 5G அலைக்கற்றை ஏலத்தில் ஆதானி குழுமம் பங்கேற்க விண்ணப்பித்த போது, இருவரும் மோதலில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பப்ளிக் நெட்வொர்க்கிற்காக 26 GHz பேன்டில் 400 MHz அலைக்கற்றையை ஆதானி வாங்கினார். இதனால் பஞ்சும் நெருப்பும் உரசியதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் போனது.
2022 ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானி முதலீடு செய்திருந்த செய்தி தொலைக்காட்சி நிறுவனமான NDTV இல் இருந்த தனது பங்குகளை அதானிக்கு விற்பனை செய்தது, அதன் மூலம் NDTV நிறுவனத்தை அதானி கையகப்படுத்துவதற்கான வழிவகுத்தது முக்கியமான விஷயமாக இருந்தது.
இந்த மாத தொடக்கத்தில் ஜாம்நகரில் நடந்த முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட விழாவில் கௌதம் அதானி கலந்து கொண்டார். இந்த இரு பெரும் நிறுவனங்களுக்கிடையேயான உறவு போட்டி மட்டும் இல்லாமல், தேவைப்படும் சமயங்களில் கூட்டணியாகவும் இருக்கலாம் என்பதே தற்போதைய வர்த்தக சந்தையின் யதார்த்தமாகியுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications