இந்தியாவின் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குரூப் ஆகியவை பல துறையில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தற்போது இருவரும் ஒரே துறையில் போட்டிப்போடும் நிலை பல இடங்களில் உருவாகியுள்ளது.
தற்போது அம்பானியும், அதானியும் மீடியா துறையில் போட்டிப்போடுவது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான முதலீட்டைத் திரட்டி விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்திய மீடியா துறை
நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் முகேஷ் அம்பானியும், கௌதம் அதானியும் மீடியா துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைக் கொட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் - வாய்காம்18
இந்நிலையில் ரிலையன்ஸ் மற்றும் வாய்காம்18 இணைந்து வாய்காம்18-ஐ இந்தியாவின் மிகப்பெரிய டிவி மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ் முர்டோக்கின் லூபா சிஸ்டம்ஸ் மற்றும் முன்னாள் டிஸ்னி நிர்வாகி உதய் சங்கர் நிர்வாகம் செய்யும் போதி ட்ரீ நிறுவனம் சுமார் 13500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது
ரிலையன்ஸ் ஜியோ
இந்த முதலீட்டின் வாயிலாக ரிலையன்ஸ் ஜியோ கட்டுப்பாட்டில் இருக்கும் ஜியோசினிமா தளத்தை வாய்காம்18 மற்றும் ரிலையன்ஸ் கட்டுப்பாடில் இருக்கும் வாய்காம்18 இந்தியா கிளைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் டிவி மற்றும் டிஜிட்டல் துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியும்.
அதானி குழுமம்
இதேவேளையில் அதானி குழுமம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மீடியா துறையில் இறங்குவதற்காக AMG மீடியா நெட்வொர்க்ஸ் என்னும் நிறுவனத்தைத் துவங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் வாயிலாகப் பிப்ளிஷிங், விளம்பரம், பிராட்காஸ்டிங், கன்டென்ட் டிஸ்ட்ரிபியூஷன் போன்ற பிரிவில் தீவிரமாக இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ப்ளூம்பெர்க் பங்குகள்
இதேபோல் அதானி மீடியா வென்சர்ஸ் நிறுவனம் ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் இந்திய கூட்டணி நிறுவனமான Quintillion Business Media நிறுவனத்தில் முதலீடு செய்து பங்குகளைக் கைப்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.
அம்பானி Vs அதானி
அதானி குழுமம் மீடியா துறையில் புதிதாக இறங்கியிருந்தாலும், தனது பணப் பலத்தின் மூலம் அதிகப்படியான நிறுவனத்தைக் கைப்பற்ற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதனால் விரைவில் மீடியா துறையில் ரிலையன்ஸ்-க்கு நிகரான அதானி குழுமமும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications