குஜராத்துக்கு ஜாக்பாட் தான்.. அதானியும்,POSCOவும் இணைந்து பிரம்மாண்ட இரும்பு ஆலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழுமம் மற்றும் தென் கொரியாவின் POSCO -வும் இணைந்து குஜராத்தில் உள்ள முந்தாராவில், ஒரு பிரம்மாண்ட இரும்பு ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளன.

இதில் ஒருங்கிணைந்த இரும்பு ஆலை மட்டும் அல்லாது, பிற வணிகங்கள் உள்பட பலவற்றினையும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் உருவாக்கப்படவிருக்கும் இந்த ஆலைக்காக சுமார் 5 பில்லியன் டாலர்கள் (சுமார் 36,000 கோடி ரூபாய்க்கும் மேலாக) முதலீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இந்த ஆலையானது POSCO -வின் அதிநவீன தொழில நுட்பம் மற்றும் அதிநவீன R &D திறனை அடிப்படையாகக் கொண்டது. மேலும் POSCO - மற்றும் அதானி குழுமம் இரண்டும் புதுபிக்கதக்க ஆற்றல் எனர்ஜியினையும் மற்றும் பசுமை ஹைட்ரஜனையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. இதுமட்டுமல்ல இவ்விரு நிறுவனங்களும் பல்வேறு வணிகளுக்கும் ஒத்துழைக்கும் விதமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்

இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்

இந்த கூட்டு முயற்சியானது இந்தியாவின் உற்பத்தி துறையில் மேற்கொண்டு வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். குறிப்பாக ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்திற்கும் பங்களிக்கும். இது உற்பத்தி மற்றும் பசுமை ஆற்றல் துறையிலும் மேம்ப்படுத்தும். இது இந்தியாவில் பசுமைஆற்றல் வணிகத்தினை வலுப்படுத்த உதவும் என அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி கூறியுள்ளார்.

 இந்தியா - தென் கொரியா உறவு

இந்தியா - தென் கொரியா உறவு

இதே POSCO -வின் தலைமை செயல் அதிகாரியான ஜியோ- வூ சோய், இது கூட்டணி குறித்து "great synergy in the steel and environment-friendly business" எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டணியானது இந்தியா மற்றும் தென் கொரியா இடையே ஒரு நல்ல பாலமாக அமையும். இவ்விரு நாடுகளின் உறவு மேம்படும். மேலும் இது ஒரு நிலையான வணிக மாதிரியாக இருக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் 4 ஆலைகள்

இந்தியாவில் 4 ஆலைகள்

POSCO நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் மகராஷ்டிராவில் ஒரு ஆலையையும், புனே, சென்னை, டெல்லி மற்றும் அகமதாபாத்திலும் 4 ப்ராசசிங் ஆலைகளை நடத்தி வருகின்றது. இதற்கிடையில் அதானி குழுமம் சமீபத்தில் தான் புதுபிக்கதக்க எரிசக்தி ஆற்றல் துறையில், மிகப்பெரிய முதலீட்டினை அறிவித்தது. இது இந்தியாவின் பசுமை ஆற்றல் எனர்ஜி வளர்ச்சியில் மிக முக்கியமானதாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani and POSCO sign an agreement to set up a huge steel plant

Adani and POSCO sign an agreement to set up a huge steel plant/குஜராத்துக்கு ஜாக்பாட் தான்.. அதானியும்,POSCOவும் இணைந்து பிரம்மாண்ட இரும்பு ஆலை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X