இந்தியாவின் வேகமான உள்கட்டமைப்பு துறை வளர்ச்சியில் பெரிய லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக ஹோல்சிம் நிறுவனத்தைக் கைப்பற்றி சிமெண்ட் உற்பத்தித் துறைக்குள் வந்த அதானி குழுமம் அடுத்தடுத்து சிறு சிமெண்ட் நிறுவனங்களைக் கைப்பற்றி தற்போது நாட்டின் 2வது பெரிய சிமெண்ட் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் அதானி குழுமத்தின் முக்கிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ், ஓரியண்ட் சிமெண்ட் லிமிடெட் (OCL) நிறுவனத்தை சுமார் ரூ.8,100 கோடி ஐ மொத்த பங்கு மதிப்பீட்டில் 46.8% பங்கை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்நிறுவனம் கூடுதலாக 26% பங்கை கையகப்படுத்த ஓப்பன் ஆஃபரையும் அறிவித்துள்ளது.

அடுத்த 3-4 மாதங்களுக்குள் கூடுதலாக 26% பங்கை ஒப்பன் ஆஃபர் மூலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஓப்பன் ஆஃபரில் ஒரு பங்கை ரூ.395.40 விலையில் வாங்க முடிவு செய்துள்ளதாகவும், கூடுதல் பங்கு கைப்பற்றலை SAST விதிகளுக்கு இணங்க கைப்பற்றப்படும் என்று SEBI-க்கு சமர்ப்பித்த அறிக்கையில் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்குப் பின், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஓரியண்ட் சிமெண்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவன பங்குகளும் பங்குச் சந்தையில் உயர்ந்தன. அம்புஜா சிமெண்ட்ஸின் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் 1.49% உயர்ந்தன, அதேசமயம் ஓரியண்ட் சிமெண்ட்ஸின் பங்குகள் 1.65% லாபம் அடைந்தன.
அம்புஜா சிமெண்ட்ஸ், ஓரியண்ட் சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் சுமார் 46.8% பங்குகளை தற்போதைய பங்குதாரர்கள் மற்றும் பொது பங்குதாரர்களிடமிருந்து கையகப்படுத்த உள்ளது. இந்த பங்குகளுக்கான நிதியை முற்றிலும் நிறுவனத்தின் உள் நிதி திரட்டல்கள் மூலம் நிதியளிக்கப்படும்.
அம்புஜா சிமெண்ட்ஸின் இயக்குநரான கரண் அதானி, கூறுகையில் இந்த கையகப்படுத்தல் மூலம் அதானி சிமெண்ட்ஸ் பிரிவின் உற்பத்தி திறனை 2025ஆம் நிதியாண்டில் 100 MTPA ஆக அதிகரிக்கும் என்று கூறினார்.
சி.கே.பிர்லா குடும்பம் மற்றும் இக்குடும்பத்திற்குச் சொந்தமான தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அமைப்புகள் இணைந்து ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தில் 37.9% பங்குகளை வைத்திருக்கின்றன. கடந்த அக்டோபர் மாதம் சி.கே.பிர்லா அதானியுடன் இணைவதற்கான முயற்சிகள் நடந்தன.
அப்போது ஒரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3,878 கோடியாக இருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்து ரூ.6,290.50 கோடியாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications