கௌதம் அதானி அரசு அதிகாரிகளுக்கு 2100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுத்து SEIC நிறுவனத்திடம் 12 கிகாவாட் சோலார் மின்சாரத்தை விற்பனை செய்யும் மாபெரும் திட்டத்தை கைப்பற்றியது அமெரிக்க SEC அமைப்பின் வழக்கு மூலம் தெரிய வந்த நிலையில், இதில் அமெரிக்க நிறுவனமான அசூர் பவர்-க்கு தொடரும், முன்னால் டாடா குழும அதிகாரிக்குமான தொடர்பும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அனைத்திற்கும் துவக்கம் சோலார் எனர்ஜி ஒப்பந்தம், மத்திய அரசின் Solar Energy Corporation of India (SECI) 12 கிகாவாட் சோலார் மின்சாரத்தைத் தயாரிக்க முடிவு செய்தது. ஆனால் மத்திய அரசு சோலார் மின்சார உற்பத்தியில் நேரடியாக இறங்காமல் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தது. இதற்காக டென்டர் விடப்பட்டதில் அதானி கீரின் எனர்ஜி மற்றும் அமெரிக்காவின் அசூர் பவர் ஆகியவை இணைந்து 12 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை மத்திய அரசின் SECI நிறுவனத்திற்கு விற்கப்பட வேண்டும், இதுதான் ஒப்பந்தம்.

இந்த அமெரிக்காவின் அசூர் பவர் தான் அதானி குழுமத்துடன் இணைந்து இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, இதோடு அதானி குழுமம் அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பல தவணையில், பல முறையில் 3 பில்லியன் டாலர் வரையில் கடன் பெற உதவியது. இந்த மாஸ்டர்பிளான்-க்கு உதவியது தான் எக்ஸ் டாடா குழும தலைவர்.
அமெரிக்க நீதித்துறையின் 52பக்க குற்ற அறிக்கையில் 7 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டாலும், co-conspirators பெயரில் 2 பேர் சேர்த்துள்ளது. இவர்கள் தான் அசூர் பவர் வாயிலாக அமெரிக்காவில் இருந்துகொண்டு அனைத்து விதமான பணிகளையும் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையில் Conspirators No 1 என ஒரு நபரை பிரிட்டன் நாட்டின் குடிமகன் தற்போது ஹாங்காங் நாட்டில் வசிப்பதாகவும். இவர் அமெரிக்க இன்சூர் மற்றும் இன்சூர் நிர்வாக குழுவில் அக்டோபர் 2021 முதல் அக்டோபர் 2023 வரையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது அது Alan Rosling ஆக இருக்கும் என தெரிய வந்துள்ளது. இவர் இந்த 2 வருட காலத்தில் Azure Power Global-ன் நான் எக்ஸ்கியூட்டிவ் ஆக இருந்தார். இதே காலகட்டத்தில் Azure Power India நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
2004 -2009 வரையில் Alan Rosling டாடா சன்ஸ் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருந்தவர், டாடா குழுமத்தின் வெளிநாட்டு வர்த்தக விரிவாக்கத்திற்கு பெரும் பங்காற்றியவர். 90களில் பிரிட்டன் பிரதமராக இருந்த ஜான் மேஜர்-க்கு சிறப்பு ஆலோசகராக இருந்த முக்கிய புள்ளி.
அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையில் Conspirators No 2 என மற்றொரு நபரை குறிப்பிட்டு உள்ளது. இது ஒரு இந்திய வம்சாவளியினர், இவர் ஜூலை 2019 முதல் ஏப்ரல் 2022 வரையில் அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக பொறுப்பில் இருந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அடுத்த முக்கிய விஷயமாக, அமெரிக்க நீதித்துறையின் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ள 7 பேரில் ஒருவர் தான் ரஞ்சித் குப்தா. Azure Power Global-ன் உயர்மட்ட நிர்வாகம் ஏப்ரல் 25, 2022ல் சிஇஓ ரஞ்சித் குப்தா-வை ராஜினாமா செய்ய உத்தரவிட்ட போது Conspirators No 2 நபரையும் ராஜினாமா செய்ய கூறியதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இப்படி பார்க்கும் போது இந்த விபரங்களை ஒத்த ஒரு நபர் என்றால் அது முரளி சுப்பிரமனியம் என்கிற Azure Power நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகும். இப்பதவியில் சுமார் 3 வருடம் பணியாற்றியுள்ளார் முரளி சுப்பிரமனியம்.
2022ல் சிஇஓ ரஞ்சித் குப்தா மற்றும் சிஓஓ முரளி சுப்பிரமனியம் வெளியேறிய பின்பு, புதிய சிஇஓ அமைக்கப்படும் வரையில் அனைத்து பொறுப்பும் Alan Rosling கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அக்டோபர் 2023 வரையில் அதானி குழுமம் தொடர்பான அனைத்து பணிகளும் இந்த 3 பேர் கட்டுப்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது.
ரஞ்சித் குப்தா பெயர் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளதால், Conspirators No 1 ஆக Alan Rosling-ஐயும், Conspirators No 2 ஆக முரளி சுப்பிரமனியம் குறிப்பிட்டு உள்ளதாக எக்னாமிக் டைமஸ் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications