ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைகள் அதானி குழுமத்தை திட்டமிட்டு தாக்கும் முயற்சி என கௌதம் அதானி கூறினாலும், இந்த சம்பவத்திற்கு பின்பு அதானி குழுமம் பல விரிவாக்க பணிகளை நிறுத்தியது மட்டும் அல்லாமல் பல முன்னணி நிறுவன பங்குகளை விற்பனை செய்து பெரும் முதலீட்டை திரட்டியுள்ளது. இதில் முக்கிய கட்டமாக அதானி குழுமம் இரு நிறுவனங்களை மொத்தமாக கைகழுவியுள்ளது.
அதானி குழுமத்தின் இரண்டு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அதாவது NBFC நிறுவனங்களான அதானி கேபிட்டல் மற்றும் அதானி ஹவுசிங் ஆகிய நிறுவனத்திலும் 90% பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான பெயின் கேபிடல் வாங்கியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

கடந்த சில நாட்களாக பெயின் கேப்பிடல் இத்துக்குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை தமிழ் குட்ரிட்டனஸ் உட்பட பல பத்திரிக்கைகள் அறிவித்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு மூலம் இது உறுதியாகியுள்ளது.
அதானி கேபிட்டல் மற்றும் அதானி ஹவுசிங் ஆகிய நிறுவனங்களிலும் 90% பங்குகளை பெயின் கேப்பிடல் வாங்கும் வேளையில் மீதமுள்ள 10 சதவீத பங்குகளை தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் கவுரவ் குப்தா-விடம் இருக்கும். இதன் மூலம் இரண்டு நிறுவனங்களிலும் அதானி குழுமத்தின் பங்கீட்டை மொத்தமாக வாங்கியுள்ளது பெயின் கேப்பிடல்.
அதானி கேபிட்டல் மற்றும் அதானி ஹவுசிங் நிறுவனங்களில் இருந்து அதானி குழுமம் மொத்தமாக வெளியேறியிருக்கும் வேளையில் பெயின் கேபிடல் இரு NBFC நிறுவனத்தின் வளர்ச்சியை எளிதாக்கும் வகையில் 120 மில்லியன் டாலர் மூலதனத்தை உட்செலுத்த உள்ளது. இதோடு Bain Capital இந்நிறுவனத்திற்கு 50 மில்லியன் டாலரை மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வாயிலாகவும் வழங்குகிறது.
இந்த பரிவர்த்தனையின் மூலம் அதானி கேபிட்டல் மற்றும் அதானி ஹவுசிங் நிறுவனங்களில் இருந்து அதானி குடும்பத்தின் 100% தனியார் முதலீடுகள் வாங்கப்பட்டு உள்ளது, கௌரவ் குப்தா நிறுவனத்தில் தொடர்ந்து நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுவார். இந்த பங்கு கைமாற்றம் மார்ச் காலாண்டுக்குள் முடியும்.
அதானி கேபிட்டல் நிறுவனம் இந்தியாவில் MSME, விவசாய துறை சார்ந்த கடன்களையும். அதானி ஹவுசிங் மலிவு விலை வீடுகளுக்கான கடன்களை வழங்கி வருகிறது. பெயின் கேபிடல் இதுவரையில் இந்திய நிதி துறையில் ஆக்சிஸ் வங்கி, 360One (முன்பு IIFL Wealth), Judo Bank, L&T Finance Holdings, Legacy Corporate Lending என பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications