இந்திய சிமெண்ட் துறையில் ஆதிக்க நிலையை அடைய வேண்டும் என்ற பெரும் கனவுடன் களமிறங்கியுள்ளது அதானி குழுமம். இதற்காக தனது கட்டுப்பாட்டில் இருக்கும் அம்புஜா சிமெண்ட்ஸ் குறிப்பிடத்தக்க வகையில் தமிழ்நாட்டில் ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது.
அதானி சிமெண்ட் வர்த்தகத்தில் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்கள் இருந்தாலும், நாட்டின் பல மாநிலத்தில், பல சிமெண்ட் மற்றும் சிமெண்ட் உற்பத்தி சார்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இந்தியாவில் 2வது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் அதானி சிமெண்ட் தென்னிந்தியாவில் தனது வர்த்தகத்தை பலப்படுத்த தூத்துக்குடி நிறுவனத்தை சத்தமில்லாமல் வாங்கியுள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள 1.5 மில்லியன் டன் திறன் கொண்ட சிமெண்ட் உற்பத்திக்கு முக்கியமான கிரைண்டிங் ஆலையை ரூ.414 கோடிக்கு மை ஹோம் குழுமத்திடம் இருந்து கையகப்படுத்தியுள்ளது அம்புஜா சிமெண்ட்ஸ். இந்த கையகப்படுத்துதலின் மூலம், அதானி குழுமத்தின் மொத்த சிமெண்ட் உற்பத்தி திறன் தற்போது சுமார் 79 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
தென்னிந்திய சந்தையில் வலுவாக கால்பதிக்கும் திட்டத்துடன் தூத்துக்குடியில் உள்ள இந்த சிமெண்ட் கிரைண்டிங் ஆலையை கையகப்படுத்தியது மூலம் ஆம்புஜா சிமெண்ட்ஸின் வளர்ச்சி பாதையை வலுப்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவில் அதிகரித்து வரும் சிமெண்ட் தேவையில் பெரும் வர்த்தகத்தை கைப்பற்றவே தூத்துக்குடி நிறுவனம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
மேலும் ஆம்புஜா சிமெண்ட்ஸில் அதானி குழுமத்தின் பங்கு இருப்பை அதிகரிக்க இந்நிறுவனம் வெளியிட்ட வாரண்ட்டுகளை முழுமையாக வாங்க முடிவு செய்து சுமார் ரூ.8,339 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம், ஆம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் அதானி குழுமத்தின் பங்கு இருப்பு 63.2 சதவீதத்திலிருந்து 70.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் ரூ.5,000 கோடியும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.6,661 கோடியும் என முன்னதாக முதலீடு செய்த தொகையுடன் சேர்த்து, மொத்த முதலீடு ரூ.20,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிதியுதவி கொண்டு சிமெண்ட் நிறுவனங்களால் 2028 ஆம் ஆண்டுக்குள் ஆண்டு திறனை 140 மில்லியன் டன்னாக என தற்போதைய நிலையை காட்டிலும் இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications