பங்குசந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையை முடித்துள்ளது. ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி இன்று அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையின் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் செபி எதை கண்டுப்பிடித்துள்ளது என்பதை பட்டியலிடாமல் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் வழிக்காட்டுதலின் படி செபி அமைப்பு தனது விசாரணையில் அதானி குழுமம் செய்த 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், 2 பரிமாற்றங்களின் விசாரணை இடையில் இருப்பதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் செபியின் முந்தைய 15 நாள் அவகாசம் கேட்டு சமர்ப்பிக்கப்பட்ட மனு மற்றும் 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுகளின் அறிக்கை ஆகிய இரண்டையும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விசாரிக்க உள்ளது, அதாவது நாளை விசாரிக்க உள்ளது. இந்த நிலையில் இன்று அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் நிலை என்ன..?
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 81.94 புள்ளிகள் உயர்ந்து, 64,968.45 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 37.65 புள்ளிகள் உயர்ந்து 19,303.45 புள்ளிகளை எட்டியுள்ளது. இந்த வர்த்தக சூழ்நிலையில் செபியின் விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்பு அதானி குழும பங்குகளின் நிலவரம் என்ன?
- அதானி எண்டர்பிரைசஸ் - 0.57 சதவீதம் உயர்வு
- அதானி போர்ட்ஸ் - 0.05 சதவீதம் உயர்வு
- அதானி பவர் - 0.89 சதவீதம் சரிவு
- அதானி எனர்ஜி சொல்யூஷன் - 0.42 சதவீதம் சரிவு (முன்பு இதன் பெயர் அதானி டிரான்ஸ்மிஷன்)
- அதானி கிரீன் எனர்ஜி - 0.08 சதவீதம் சரிவு
- அதானி டோட்டல் கேஸ் - 0.18 சதவீதம் உயர்வு
- அதானி வில்மார் - 0.0 சதவீதம்
- ஏசிசி லிமிடெட் - 0.28 சதவீதம் உயர்வு
- அம்புஜா சிமெண்ட்ஸ் - 0.57 சதவீதம் உயர்வு
- NDTV - 0.36 சதவீதம் சரிவு
பங்குசந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பு, அதானி - ஹிண்டர்பர்க் விவகாரம் தொடர்பாக 24 பரிமாற்றங்கள் குறித்த விசாரணையில் 5 நாடுகளில் செய்யப்பட்ட பிரமாற்றங்கள் குறித்து தரவுகளை சேகரித்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications