இந்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான முக்கிய ஆயுதத்தை இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானியின் அதானி குழுமம் தயாரிக்க உள்ளது. இந்திய ராணுவத்தின் பாதுக்காப்பு துறையை வலிமைப்படுத்த பலவிதமான ஆயுதங்கள் தேவைப்படும் வேளையில், அதானி டிபென்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனம், 70 மிமீ ராக்கெட்டுகளை உள்நாட்டிலேயே தயாரிக்க தாலஸ் குழுமத்துடன் (Thales Group) ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த புதிய கூட்டணி மூலம் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு தேவையை உள்நாட்டிலேயே உற்பத்தி அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுக்குறித்து தாலஸ் குழுமம் ட்விட்டரில் செய்த பதிவில் "இந்த கூட்டாண்மை இந்தியாவுடனான எங்கள் உறுதிப்பாட்டிற்கு மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் எங்கள் கூட்டாளர் வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் இது முக்கியமானது" என்று தெரிவித்துள்ளது.
இந்த கூட்டணியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 70 மிமீ ராக்கெட்டுகள், இந்திய ராணுவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹெச்.ஏ.எல் ருத்ரா (HAL Rudra) மற்றும் பிரசண்ட் (Prachand) ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும்.

போர்களத்தில் தாக்குதல் திறன் கொண்ட லைட் ஹெலிகாப்டரான ஹெச்.ஏ.எல் ருத்ரா என்பது, ஏர் டூ ஏர் மற்றும் ஏர் டூ கிராவுன்ட் தரை ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்க கூடிய திறன் கொண்டது. உயரமான மலைப்பகுதியில் போரிட பயன்படுத்தும் ஹெச்.ஏ.எல் பிரசண்ட், மேம்பட்ட ஆயுதகளை கொண்டு தாக்க கூடிய வல்லமை கொண்டது.
இதன் மூலம் ஹெச்.ஏ.எல் ருத்ரா, ஹெச்.ஏ.எல் பிரசண்ட் ஆகிய இரு ஹெலிகாப்டரிலும் அதானி டிபென்ஸ் தயாரிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications