இந்திய விமான நிலையங்களில் பெரும்பாலானவற்றை அதானி ஏர்போர்ட்ஸ் கைப்பற்றி இயக்கி வரும் நிலையில், அடுத்தகட்டத்தை அடைய வேண்டும் என்ற திட்டத்துடன் அதானி குழுமம் ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது.
இப்புதிய நிறுவனத்தின் மூலம் ஏர் இந்தியா சொத்துக்களை அடைய முடியும் என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.
அதானி குழுமம்
அதானி குழுமத்தின் கிளை நிறுவனமாக இருக்கும் அதானி டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் Air Works என்னும் விமானங்களின் மெயின்டனன்ஸ், ரிப்பேர் மற்றும் overhaul செய்யும் நிறுவனத்தைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. Air Works நிறுவனம் சுமார் 27 நகரங்களில் இயங்கி வருகிறது.
Air Works நிறுவனம்
Air Works நிறுவனம் பலதரப்பட்ட விமானங்கள், பணிகளைச் செய்யக்கூடியவை, இந்நிறுவனத்திற்கு மும்பை, டெல்லி, ஒசூர் மற்றும் கொச்சியில் தனித்தனி விமான ரிப்பேர் செய்யப்படும் தளங்கள் உள்ளது. இந்திய போக்குவரத்தில் விமான இணைப்பு முக்கிய இடம் வகிக்கும் நிலையில், இப்பிரிவு வர்த்தகம் முக்கியமானதாக விளங்குகிறது.
65000 கோடி ரூபாய்
மத்திய அரசு 2023 ஆம் நிதியாண்டில் அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு அளிப்பதன் மூலம் 65000 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மத்திய அரசு, இதனால் அடுத்தடுத்து நிறுவனங்களைத் தனியார்மயமாக்கல் செய்யத் தயாராகி வருகிறது.
ஏர் இந்தியா கிளை நிறுவனங்கள்
IDBI வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்த நிலையில், ஏர் இந்தியாவை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்வதற்கு முன்பாக இதன் கிளை நிறுவனங்களாக இருந்த Air India Engineering Services Ltd (AIESL), Air India Airport Service Ltd (AIASL), Alliance Air கூட்டணி ஆகியவையும் தற்போது மத்திய அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் தற்போது மத்திய அரசு இறங்கியுள்ளது.
வாய்ப்பு
இவ்விரு ஏர் இந்திய கிளைகளைக் கைப்பற்ற அதானி குழுமத்திற்கு ஏர் வொர்க்ஸ் முக்கியப் பங்கு விகிக்க வாய்ப்பு உள்ளது. Air Works நிறுவனம் 1951 முதல் இயங்கி வருகிறது, AIESL கைப்பற்றுவது மூலம் வர்த்தகம், வாடிக்கையாளர் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடையும்.


Click it and Unblock the Notifications