அலேக்கா தூக்கிய அதானி! ஆந்திராவில் 8500 கோடி ரூபாய் திட்டத்தை கைப்பற்றியது அதானி எனர்ஜி!

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் எனர்ஜி துறையில் மாபெரும் திட்டத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் இன்டர் ஸ்டேட் பவர் டிரான்ஸ்மிஷன் திட்டத்தை ஆதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த திட்டத்தின் மதிப்பு 8500 கோடி ரூபாயாகும், இத்திட்டம் மூலம் அதானி எனர்ஜி நிறுவனத்தின் மொத்த ஆர்டர் புக் மதிப்பு 80000 கோடி ரூபாயாக உள்ளது, அதாவது இந்நிறுவனம் தற்போது 80000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அலேக்கா தூக்கிய அதானி! ஆந்திராவில் 8500 கோடி ரூபாய் திட்டத்தை கைப்பற்றியது அதானி எனர்ஜி!
Also Read

விசாகபட்டினம் பகுதியில் கிரீன் ஹைட்ரஜென் மற்றும் கிரீன் அமோனியா திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு தேவையான மின்சாரத்தை சப்ளை செய்வதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்விரு தொழிற்சாலைகளுக்கு சுமார் 4500 மெகாவாட் மின்சாரம் தேவை என்பதால் இத்திட்டம் மத்திய அரசின் பிட்டிங் திட்டத்தின் மூலம் அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.

இந்த திட்டம் ஹைட்ஜென் மற்றும் அமேனியா தொழிற்சாலைகளுக்காக உருவக்கப்பட்டாலும், இத்திட்டம் மூலம் பெண்டூர்த்தி-விசாகப்பட்டினம் பகுதியில் அமைய உள்ள டேட்டா சென்டர் மற்றும் டிஜிட்டல் இன்பராஸ்டக்ச்சர் திட்டத்திற்கான மின்சாரத்தையும் சப்ளை செய்யும் வாய்பை இந்த திட்டம் மூலம் கிடைக்கும். இதன் மூலம் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ்-க்கு டபுள் ஜாக்பாட் ஆகும்.

Recommended For You

இத்திட்டம் மூலம் இந்நிறுவனத்தின் மின்சார பகிர்மான திட்டம் பெரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ளது. இதேபோல் இத்திட்டம் அடுத்த 30 மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ள அதானி குழுமம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது அடுத்த தலைமுறை திட்டங்களை தொடர்ந்து பெறும் மாநிலமாக ஆந்திர பிரதேசம் உள்ளது, ஒருபக்கம் டேட்டா சென்டர், விமான நிலையம், ஐடி நிறுவனங்கள் என தொடர்ந்து முதலீட்டையும், நிறுவனங்களை ஈர்த்து வரும் ஆந்திர பிரதேசம்..

மறுப்பக்கம் இத்திட்டங்களை சிறப்பாகவும், நீண்ட காலம் எவ்விதமான உள்கட்டமைப்பு பிரச்சனைகளும் இல்லாமல் இயங்கும் வகையிலான உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இதில் சாலை திட்டம், மின்சாரம் இணைப்பு, துறைமுக மேம்பாடு என தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறது.

இதனால் அடுத்த 10-15 வருடத்தில் ஆந்திரா மாநிலத்தின் வளர்ச்சி மிகவும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்களும் பெரும் முதலீட்டை ஈர்த்து வந்தாலும், ஆந்திரா இந்த ரேசில் மிகவும் முன்னோடியாக உள்ளது என்றால் மிகையில்லை.

இதற்கு உதாரணமாக ஆந்திராவில் தற்போது 10க்கும் அதிகமான விமான நிலைய திட்டங்கள் செய்லபடுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆந்திரா முழுவதும் வான் போக்குவரத்து பெரிய அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+