அதானி குழும பங்குகள் தொடர்ந்து ஹிண்டர்ன்பர்க் அறிக்கையின் மத்தியில் தொடர்ந்து சரிவினை கண்டு வந்த நிலையில், இன்று 25% வரையில் ஏற்றம் கண்டுள்ளன. இது அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆறுதலை கொடுத்துள்ளது எனலாம்.
அதானி குழுமத்தின் இந்த திடீர் ஏற்றத்திற்கு என்ன காரணம்? இந்த ஏற்றம் இப்படியே தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதானி பங்குகள் திடீர் எழுச்சி
அதானி குழுமத்தின் இந்த திடீர் எழுச்சிக்கு முக்கிய காரணம் ஜேபி மார்கன் நிறுவனம் தற்போதும் கூட, அதானி குழும பத்திரங்கள் தகுதியுடையவை தான் என்று கூறியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் அதானி குழும பங்குகள் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டுள்ளன.
அதானி குழுமத்திற்கு எல்லா தகுதியும் இருக்கு?
அதானி குழுமம், CEMBI, JACI மற்றும் JESG குறியீடுகளுக்குத் தகுதி பெற்றுள்ளது என்று ஜேபி மோர்கன் சுட்டிக் காட்டியுள்ளது. அதானி குழும நிறுவனங்கள் CEMBI, JACI மற்றும் JESG குறியீடுகளில் சேர்ப்பதற்கு தகுதியுடையதாகவே இருக்கும் என்று ஜேபி மார்கன் அதானி குழுமத்திற்கு ஆதரவாக ஒரு குறிப்பினை குறிப்பிட்டுள்ளது
முன் கூட்டியே கடன் அடைப்பு
அதோடு அதானி குழும பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை பிணையமாக வைத்து அதிகளவில் கடன் பெற்றுள்ளது என்ற சர்ச்சையானது உலாவி வந்தது. இதற்கிடையில் அதானிக்கு தற்போதைக்கு எந்த தொகையும் திரும்ப செலுத்த முடியாத சூழலில் உள்ளது என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில் தான் நாங்கள் அப்படி எல்லாம் இல்லை, அதானி குழுமத்தின் பிணையமாக வைக்கப்பட்ட வாங்கியிருந்த 1114 மில்லியன் டாலர் கடனை முன் கூட்டியே செலுத்துகிறோம் என கூறி செலுத்தியுள்ளது.
நம்பிக்கை அதிகரிக்கலாம்
அதிலும் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் அதானி குழுமங்கள் இந்த பிணைய கடனுக்கு இன்னும் கால அவகாசம் போதிய அளவு உள்ளது தான். எனினும் தங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க அதானி குழுமம் பார்த்து பார்த்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வருகின்றது. அதானியின் இந்த திட்டம் ஓரளவுக்கு அதானி குழுமத்திற்கு கைகொடுத்துள்ளது என்றே கூறலாம்.
அதானி குழும பங்குகள் உச்சம்
ஏனெனில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 25% அதிகரித்து, 1965.50 ரூபாயாகவும், இதே போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, 9.64% ஏற்றம் கண்டு, 598.70 ரூபாயாகவும், இதே அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலையானது அப்பர் சர்க்யூட் ஆகி, 399.40 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதே அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது அப்பர் சர்க்யூட் ஆகி 1324.45 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது.
கவனித்து வருகின்றோம்
அதானி குழுமம் குறித்த பொதுவில் கிடைக்கும் தகவல் மற்றும் பத்திரங்களின் பணப்புழக்கத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் அதானி குழுமத்தின் முக்கிய வணிகங்களில் துறைமுகங்கள், மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அடங்கும், CEMBI மற்றும் JACI குறியீடுகளில் மொத்தம் 7.7 பில்லியன் டாலரைக் கொண்டுள்ளது என ஜேபி மார்கன் சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதானி பங்குகள் ஏற்றம்?
கார்ப்பரேட் எமர்ஜிங் மார்க்கெட் பாண்ட் இன்டெக்ஸ் சீரிஸ் (CEMBI), வளர்ந்து வரும் சந்தை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனைக் கண்காணிக்கிறது. ஜேபி மார்கன் ஆசியா கிரெடிட் இண்டெக்ஸ் (JACI) ஆசிய நிலையான-விகித டாலர் பத்திரச் சந்தையின் மொத்த வருவாய் செயல்திறனைக் கண்காணிக்கிறது. இதனைத் தொடர்ந்து தான் தற்போது அதானி குழும பங்குகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications